- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனராக களத்தில் நிற்கும் நடிகர் தனுஷ், 3வது முறையாக வெற்றியை தக்க வைப்பாரா? ஆனா இப்படி...

இயக்குனராக களத்தில் நிற்கும் நடிகர் தனுஷ், 3வது முறையாக வெற்றியை தக்க வைப்பாரா? ஆனா இப்படி ஒரு சிக்கல் இருக்குதே…

- Advertisement -

நடிகர் தனுஷ் காதல் கொண்டேன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தேவதையை கண்டேன் சுள்ளான் திருடா திருடி புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திருவிளையாடல் ஆரம்பம் புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகராக மாறினார்.

பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் வட சென்னை என தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த தனுஷ் முன்னணி நடிகராகவும் உயர்ந்தார். ஆரம்பத்தில் ஒல்லிப்பிச்சான் நடிகர் என உருவக்கேலி செய்யப்பட்ட நடிகர் தனுஷ், இன்று தமிழ் சினிமாவில் ஒதுக்க முடியாத தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திர நடிகராக இருக்கிறார்.

ஆரம்பத்தில் நடிகராக இருந்து பிறகு தனது படங்களில் அவரே பாடவும் செய்தார். நல்ல பாடகராக வெற்றிப் பெற்ற தனுஷ் பிறகு படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறினார். அதன்பிறகு இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்திய தனுஷ் இன்று நடிகர் பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட ஒரு திரை கலைஞராக ரசிகர்கள் முன் நிற்கிறார்.

ராஜ்கிரண் – ரேவதியின் முதியோர் காதலை மையப்படுத்தி தனுஷ் இயக்கிய முதல் படம் ப பாண்டி ரசிகர்களின் கவனம் பெற்ற படமாக இருந்தது. சுமாரான வெற்றியை பெற்ற இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் இளம் வயது ராஜ்கிரண் ஆக தனுஷூம், இளம் வயது ரேவதியாக மடோனா செபாஸ்டியனும் நடித்திருந்தனர். இந்த படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற படமாக தனுஷூக்கு அமைந்தது.

கடந்த ஆண்டில் தனது 50வது படம் ராயன் படத்தை தனுஷ் இயக்கி அவரே நாயகனாகவும் நடித்தார். 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்த மிகப்பெரிய வெற்றிப் படமாக ராயன் அமைந்தது. செல்வராகவன் பிரகாஷ் ராஜ் துஷாரா விஜயன் எஸ்ஜே சூர்யா சந்தீப் கிஷன் காளிதாஸ் ஜெயராம் அபர்ணா முரளி என நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படம் மாஸ் ஹிட் படமாக தனுஷ் பெயர் சொல்லியது.

நாளை 21ம் தேதி தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படம் ரிலீஸாகிறது. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன் நாயகியாக நடித்துள்ளார். இளம் வயது காதலை மையப்படுத்தி இந்த படத்தில் புதுமுகங்களே அதிகமாக நடித்துள்ளனர். தனுஷ் கேமியோ ரோலில் மட்டுமே நடித்திருக்கிறார். ப பாண்டி ராயன் படங்களை போல தனுஷூக்கு 3வது படமும் வெற்றியை தந்து ஹாட்ரிக் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

சற்று முன்