- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவாஜி கணேசன் இளையராஜா போன்றவர்களே அந்த நடிகரின் ரசிகர்கள் தான் - இயக்குனர் பி வாசு...

சிவாஜி கணேசன் இளையராஜா போன்றவர்களே அந்த நடிகரின் ரசிகர்கள் தான் – இயக்குனர் பி வாசு சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பி வாசு. குறிப்பாக சின்னதம்பி கிழக்கு கரை சந்திரமுகி ரிக்‌ஷா மாமா மன்னன் குசேலன் நடிகன் லவ் பேர்ட்ஸ் சந்திரமுகி 2 என் தங்கச்சி படிச்சவ என அவர் இயக்கிய பல படங்கள் வெள்ளி விழா படங்களாக இருந்திருக்கின்றன.

இயக்குனர் பி வாசு இயக்கிய பெரும்பாலான படங்களில் கவுண்டமணி காமெடி காட்சிகள் பிரதானமாக இருக்கும். குறிப்பாக சின்னதம்பி நடிகன் ரிக்‌ஷாமாமா மன்னன் நடிகன் என பல படங்களில் கவுண்டமணி காமெடி படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் பக்கபலமாக இருந்துள்ளது. குறிப்பாக கவுண்டமணி சத்யராஜ் கூட்டணி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

பி வாசு இயக்கத்தில் நடிகன் படத்தில் சத்யராஜ் கவுண்டமணி நடித்திருப்பார்கள். இதில் ஒரு காட்சியில் சத்யராஜ் கிழவன் வேடம் போட்டு மனோரமாவை ஏமாற்றுவது கவுண்டமணிக்கு தெரிந்துவிடும். அதனால் சத்யராஜை கவுண்டமணி பிளாக்மெயில் செய்வார். பிரியாணி சிக்கன் மட்டன் என வாங்கித் தரச் சொல்வார்.

அந்த காட்சியில் பிரியாணிக்கு பதிலாக புளிசாதம் வைத்திருப்பதை கவுண்டமணி தெரிந்துக்கொண்டு சத்யராஜிடம் கலாட்டா செய்வார். இந்த காமெடி காட்சி இன்று வரை ரசிகர்களிடம் டிரண்டிங்கில் இருந்து வருகிறது. நடிகன் படம் காமெடியை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்ற படமாகும்.

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் பி வாசு ஒரு நேர்காணலில் கூறியதாவது, நடிகன் படத்துல பிரியாணி சீன் எடுக்கவே முடியலே. நாங்க சிரிச்சுக்கிட்டே இருக்கோம். என்னால மறுபடியும் எடுக்க முடியலே. எங்க கட் சொல்றதுன்னு தெரியலே. இளையராஜா சார் ரீ ரிக்கார்டிங்குல அந்த சீனை பார்த்துட்டு அப்படி ஒரு சிரிப்பு அவர் சிரிச்சாருன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டீங்க.

அந்த காமெடி காட்சியை அவ்வளவு ரசிச்சு பார்த்து சிரிச்சாரு. கவுண்டமணி சாரோட மிகப்பெரிய ரசிகர் சிவாஜி சார். கவுண்டமணி அருமையா நடிக்கிறார். சூப்பரா காமெடி பண்றாருன்னு அவர் சொல்லுவார். மிகப்பெரிய நடிகர்கள் எல்லோருமே கவுண்டமணியோட ரசிகர்கள் என்று பி வாசு அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்