நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தசெ ஞானவேல் டைரக்ட் செய்கிறார். இது ரஜினியின் 170வது படம். வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியார், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேமியோ ரோலில் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாத இறுதிக்குள் முடிவடைய உள்ளது. அதிலும் ரஜினி நடிக்க வேண்டிய போர்ஷன்கள், மிக விரைவில் முடிக்கப்பட உள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி 171 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் கடந்த 2 மாதங்களாக லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, ஜெயிலர் 2 படத்துக்கான ப்ரீ புரடக்சன் பணிகளும் துவங்கியுள்ளது. நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம், கடந்தாண்டு வெளியாக ரஜினிக்கு மாஸ் ஹிட் கொடுத்தது. அண்ணாத்த படம் சரியாக போகாத நிலையில், சற்று மனம் தளர்ந்திருந்த ரஜினிக்கு ஜெயிலர் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
வழக்கமாக ரஜினி, தனது படங்களின் 2ம் பாகம் படத்தில் நடிக்க விரும்புவதில்லை. 100க்கு 90 சதவீதம், 2ம் பாகம் படங்கள் சொதப்பலில் முடியும். ஏனென்றால் முதல் படம் தந்த விறுவிறுப்பை, கதை சுவாரசியத்தை பின்பகுதியில் பல இயக்குநர்களால் கொடுக்க முடியாது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாது.
அதனால் மாஸ் ஹிட் ஆன படங்களில், 2ம் பாகமாக வெளிவந்த பல படங்கள் வந்த சுவடு தெரியாமல் போய் விட்டன. அதனால்தான் ரஜினிகாந்த் பில்லா, பாட்ஷா, சந்திரமுகி போன்ற படங்களின் 2ம் பாகங்களில் நடிக்க மறுத்துவிட்டார். ஆனால் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதிக்க காரணம், அந்த படம் தந்த அபார வெற்றிதான். இதுவரை இப்படி ஒரு மாஸ் ஹிட் ரஜினிக்கு கிடைக்கவில்லை.
ஜெயிலர் 2 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. அதாவது இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடிப்பது உறுதியாகி உள்ளது. அதே போல் பாலிவுட் நாயகி ஒருவரும் நடிக்கிறார். ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் இது வேறு ஒரு புதிய கதைக்களத்தில் படமாக உருவாகிறது. அதனால் படம் வெற லெவலில் இருக்கும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.





