- Advertisement -
Homeபொழுதுபோக்குஎந்திரன் கதை திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை - இயக்குனர் ஷங்கர் அளித்த விளக்கம்!

எந்திரன் கதை திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை – இயக்குனர் ஷங்கர் அளித்த விளக்கம்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தது. சிட்டி என்ற பெயரில் ரோபோவாகவும், விஞ்ஞானியாக வசீகரன் என்ற பெயரில் மற்றொரு கேரக்டரிலும் ரஜினி நடித்திருந்தார்.

எந்திரன் படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் ரஜினி உருவாக்கும் எந்திரன் ரஜினி, ஒரு கட்டத்தில் அவரது காதலி ஐஸ்வர்யா ராயை காதலிப்பதும் அதற்காக ரஜினியுடன் வாக்குவாதம் செய்வதும் பிறகு, ரஜினிக்கு அந்த ரோபோவே வில்லனாக மாறுவதும் படத்தை மிகவும் ரசிக்க வைத்தது.

எந்திரன் படம் வெளியான பிறகு, இது நான் எழுதிய ஜூகிபா என்ற நாவலை காப்பியடித்து என் கதையை திருடி எடுக்கப்பட்ட படம் என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, எந்திரன் படத்தின் கதை திருட்டு உறுதியானதால் இயக்குனர் ஷங்கரின் 10.11 கோடி ரூபாய் அசையா சொத்துகளை முடக்குவதாக அறிக்கை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் விளக்கம் அளித்ததுள்ளார். அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து இயக்குனர் ஷங்கர் கூறியிருப்பதாவது, அசையா சொத்துக்கள் முடக்கம் தொடர்பான தகவல் எதுவும் அமலாக்கத் துறையிடம் இருந்து இதுவரை வரவில்லை. எந்திரன் படம் தொடர்பான வழக்கில், ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அமலாக்கத் துறையின் தொடர் நடவடிக்கையால் நான் மிகவும் வருத்தமடைகிறேன். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்தது. இரு தரப்பின் ஆதாரங்கள் வாதங்களை ஆராய்ந்து ஆரூர் தமிழ்நாடன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை சட்ட செயல்முறையின் அப்பட்டமான துஷ்பிரயோகத்தை காட்டுகிறது. அதிகாரிகள் தங்களது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். அப்படி மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் அமலாக்கத் துறையின் உத்தரவை எதிர்த்து நான் மேல்முறையீடு செய்வேன், என்று இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்