- Advertisement -
Homeபொழுதுபோக்குவாடிவாசல் படத்தை இயக்கத் தயாரான இயக்குனர் வெற்றிமாறன் - பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸை...

வாடிவாசல் படத்தை இயக்கத் தயாரான இயக்குனர் வெற்றிமாறன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தர முடிவு!

- Advertisement -

பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தனுஷ் நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை வெற்றிமாறனுக்கு தேடித் தந்தது. தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளியான ஆடுகளம் அசுரன் வடசென்னை விசாரணை விடுதலை விடுதலை 2 படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன.

இப்போது அடுத்ததாக சூர்யா அமீர் நடிக்கும் வாடிவாசல் என்ற படத்தை இயக்க வெற்றிமாறன் தயாராகி வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்த படம் சில காரணங்களால் தள்ளிப் போய் இப்போதுதான் படப்பிடிப்பை துவக்க நேரம் வந்திருக்கிறது.

மதுரை ஜல்லிக்கட்டு மற்றும் உள்ளூர் அரசியல் விவகாரங்களை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளது. சூர்யா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இயக்குனர் அமீர் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் இந்த படத்தில் நடிக்கிறார். வடசென்னை படத்தில் ராஜூ கேரக்டரில் அமீர் நடித்த போதே, வாடிவாசல் படத்தில் இந்த கேரக்டரில் அமீரை நடிக்க வைக்க வெற்றிமாறன் முடிவு செய்திருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் விடுதலை 2. ஆனால் விடுதலை படம் போல இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. படம் முழுவதும் வன்முறை காட்சிகள் கம்யூனிஸ்ட் போராட்டங்களையே படம் மையப்படுத்தி இருந்தது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அதனால் விடுதலை 2 படத்தை பொருத்த வரை வெற்றிமாறனின் மற்ற படங்களை போல பெரிய வெற்றியை வரவேற்பை பெற்ற ஒரு படமாக இல்லாமல் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துவிட்டது. அதே நேரத்தில் வாடிவாசல் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பலமடங்கு அதிகரித்து வருகிறது.

விடுதலை படத்தை இயக்குவதற்கு முன்பே இயக்குனர் வெற்றிமாறன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு படம் இயக்க ஒப்பந்தம் போட்டிருந்தார். அதற்காக அட்வான்ஸ் தொகையும் அந்த நிறுவனம் தந்திருந்தது. ஆனால் விடுதலை விடுதலை 2 படங்கள் வெளியான நிலையில் இப்போது அடுத்து வாடிவாசல் படமும் உள்ளது. அதனால் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடமே திருப்பி தரும் முடிவுக்கு வெற்றிமாறன் வந்திருக்கிறார். தனது படங்களை முடித்து மீண்டும் அந்த நிறுவனத்தின் படத்தை இயக்க இன்னும் சில ஆண்டுகள் தாமதம் ஆகும் என்பதால், வாங்கிய அட்வான்ஸ் பணத்தை தயாரிப்பு நிறுவனத்திடம் திருப்பித் தர அவர் முன்வந்திருக்கிறார்.

சற்று முன்