- Advertisement -
Homeபொழுதுபோக்குபல ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தரும் பிரபல நடிகை - ...

பல ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தரும் பிரபல நடிகை – இதுதான் நான் வரவேண்டிய சரியான நேரம் என்று பஞ்ச் டயலாக் பேசியிருக்காரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் மிக பிஸியாக நடித்த முன்னணி நடிகைகள் பலரும் இப்போது அம்மா நடிகைகளாக மாறிவிட்டனர். அதிலும் சிலர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் டிவி சீரியல்களில் அம்மாவாக அக்காவாக கொடூரமான வில்லியாக நடித்து வருகின்றனர்.

அன்றைய நாயகியாக இருந்த சரண்யா பொன்வண்ணன் குஷ்பு நதியா அம்பிகா ரேவதி சினேகா சிம்ரன் ராதிகா சரத்குமார் ரம்யாகிருஷ்ணன் போன்ற சிலர், இன்றைய படங்களில் அம்மா அக்கா கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். தேவயானி சிம்ரன் ராதிகா சரத்குமார் ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளனர்.

அந்த வரிசையில் 1990களில் மிகவும் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்பா. இவருக்கு தொடையழகி என்ற பட்டப் பெயரும் உண்டு. அருணாசலம் காதலா காதலா உள்ளத்தை அள்ளித்தா மின்சார கண்ணா நினைத்தேன் வந்தாய் சுந்தர புருஷன் ஜானகிராமன் என பல படங்களில் நடித்தவர். பிறகு திருமணமாகி குடும்ப வாழ்வில் செட்டிலாகி விட்டார்.

ஆந்திராவைச் சேர்ந்த நடிகை ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. தெலுங்கில் பல படங்களில் நடித்த ரம்பா, தமிழில் பிரபு நடித்த உழவன் படம் மூலம் அறிமுகமானார். தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரம்பா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க ஆசைப்படும் நடிகை ரம்பா, இதற்காக சமீபத்தில் ஸ்பெஷல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயான நிலையில், 40 வயதுகளை கடந்த நிலையிலும், சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர ரம்பா மிக தீவிரமாக உள்ளார். மேலும் ரம்பாவுக்கு புதிய படங்கள் கமிட்டானால், அதற்கான கால்ஷீட் மேனேஜரையும் நியமித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை ரம்பா கூறியதாவது, சினிமா எப்போதுமே என்னுடைய முதல் காதல்தான். மீண்டும் வந்து ஒரு நடிகையாக எனக்கு சவால் விடும் பாத்திரங்களை ஏற்று நடிக்க இதுதான் சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். புதிய பரிமாணங்களை ஆராய்ந்து ரசிகர்களுடன் அர்த்தமுள்ள விதத்தில் என்னை இணைக்க அனுமதிக்கும் நடிப்புக்கு முக்கியத்துவம் தருவேன். அப்படி முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை நான் எதிர்பார்க்கிறேன் என்று ரம்பா கூறியிருக்கிறார். பலமுறை டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோ நடுவராகவும் ரம்பா பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்