முன்பெல்லாம் ஒரு திரைப்படம் பார்த்தால் படத்தில் ஹீரோ இருப்பார். ஹீரோயின் இருப்பார். ஹீரோவை எதிர்க்க வில்லன் இருப்பார். காமெடி காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகள் இருக்கும். பெரும்பாலும் ஹீரோ வில்லனை பழிவாங்குவதுதான் படத்தின் மையக்கருத்தாக இருக்கும். இப்போதும் பெரும்பான படங்கள் இந்த மையக் கருத்தில்தான் உருவாகின்றன.
ஆனால் முன்பு ஹீரோ ஒரு வில்லனை பழிவாங்குவார். ஆனால் இப்போது கேங்ஸ்டர் குரூப்பையே பழிவாங்குகிறார். அத்துடன் ஹீரோவும் கேங்ஸ்டராக இருந்து பெரிய கும்பலை வைத்துக்கொண்டு இருக்கிறார். மொத்தத்தில் 5 வயது குழந்தைகள் ரசிக்க வேண்டிய சண்டை கதைகளையே 50 வயதான ரசிகர்களும் அபத்தமாக ரசிப்பதுதான் இன்றைய சினிமாவாக உள்ளது.
மேலும் பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் மற்ற மொழி நட்சத்திரங்களை எல்லாம் படத்தில் கொண்டு வந்து ஒரு சண்டைகாட்சியில் நடிக்க வைப்பதும் சிகரட் அல்லது பீடி புகைக்க வைப்பதும் அவர்கள் எதற்காக அந்த படத்தில் வந்தாா்கள் என தெரியாமல் வந்து செல்வதும் ரசிகர்களுக்கு குழப்பமாக இருந்தாலும் இது தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்த வகையில் ஜெயிலர் 2 படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெலுங்கு நடிகர் பாலய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஷாருக்கான் பவன் கல்யாண் உள்ளிட்டோர் நடிக்க மறுத்த நிலையில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பது உறுதியாகி உள்ளது.
ரஜினியுடன் ஹிருத்திக் ரோஷ் தமிழில் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை. ஆனால் கடந்த 1980களில் ரஜினி நடித்த ஒரு இந்தி படத்தில் சிறுவனாக குழந்தை நட்சத்திரமாக ஹிருத்திக் ரோஷன் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 45 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மாஸ் ஹீரோவாக அவர் ரஜினியுடன் தமிழில் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் இப்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயிலர் 2 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இப்போது ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் காட்சிகள் சற்று அதிகமான நேரம் வருவதால், விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. ஆனால் ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினி விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





