- Advertisement -
Homeபொழுதுபோக்கு20 ஆண்டுகளாக இப்படி ஒரு விஷயத்தை செய்யும் இந்தி நடிகர் அமீர்கான் - நம்ம தமிழ்...

20 ஆண்டுகளாக இப்படி ஒரு விஷயத்தை செய்யும் இந்தி நடிகர் அமீர்கான் – நம்ம தமிழ் பட ஹீரோக்கள் இவரை பார்த்தாவது கொஞ்சம் மாறுவார்களா?

- Advertisement -

இந்தி சினிமாவில் பிரபல நட்சத்திரங்களில் ஒருவராக முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் தனக்கு பிடித்தமான சிறந்த கேரக்டர்களை தேர்வு செய்து நல்ல கதைகளில் நடித்து வருகிறார். இவரை போலவே இந்தி நடிகர்கள் சல்மான்கான் ஷாருக்கான் போன்றவர்களும் ஹிட் படங்களை தொடர்ந்து தந்து வருகின்றனர்.

ஆனால் இந்திய சினிமாவில் முதன்முறையாக அமீர்கான் நடித்த டங்கல் என்ற இந்தி படம்தான் உலகளவில் ரூ. 2000 கோடி வசூலித்த படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகுதான் மற்ற படங்கள் ரூ. 1000 கோடியை வசூலில் கடந்தன. அந்தளவுக்கு அமீர்கான் நடிப்பில் இந்தியில் முக்கிய நட்சத்திரமாக தொடர்ந்து இருந்து வருகிறார்.

- Advertisement -

ஆனால் சமீப காலமாக அமீர்கான் நடித்த படங்கள் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அமீர்கான் நடித்த சமீபத்திய படங்கள் எதுவும் பூர்த்தி செய்யவில்லை. சமீபத்தில் வெளியான லால் சிங் தத்தா என்ற படத்தை அமீர்கான் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அந்த படமும் அமீர்கானுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்து தோல்வி படமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகர் அமீர்கான் ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக நான் நடிக்கும் படங்களுக்கு சம்பளம் பெறுவதில்லை. அந்த படம் திரைக்கு வந்து லாபம் தந்த நிலையில், அதில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே பங்கு பெற்றுக் கொள்கிறேன்.

- Advertisement -

அதற்கு முன்பாக படத்தின் சம்பளம் என்ற முறையில் ஒரு ரூபாய் கூட படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பெறுவதில்லை என்று அமீர்கான் கூறியிருக்கிறார். இதன்மூலம் ஒரு படத்தை தயாரிக்கும் நிறுவனம், ஹீரோவுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளத்தை கொடுத்துவிட்டு தவிக்கும் நிலை முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

ஆனால் நம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள பலரும் ஹீரோவாக படத்தில் நடிக்க சம்பளமாக ரூ. 50 கோடி முதல் ரூ. 200 கோடி வரை படப்பிடிப்புக்கு முன்பே அதில் பெரும்பகுதியை அட்வான்ஸ் ஆக வாங்கிவிட்டுதான் படப்பிடிப்புக்கே செல்கின்றனர். அமீர்கான் போல, இப்படி சம்பளம் பெறாமல் படம் வெளியான பிறகு லாபத்தில் பங்கு பெற்றால், தயாரிப்பாளர்களுக்கு பல நூறு கோடிகள் நஷ்டம் ஏற்படாது என்பதுதான் உண்மை.

- Advertisement -

சற்று முன்