- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை விமர்சித்த நடிகர் விஷாலுக்கும் சேர்த்து நான் வேலை பார்ப்பேன் - அமைச்சர் ராஜ்மோகன் ஓபன்டாக்!

என்னை விமர்சித்த நடிகர் விஷாலுக்கும் சேர்த்து நான் வேலை பார்ப்பேன் – அமைச்சர் ராஜ்மோகன் ஓபன்டாக்!

- Advertisement -

சென்னையில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி கல்வித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது, விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் வாங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

ஜனநாயகன் படம் மட்டுமல்ல. இனி எந்த ஒரு படத்தையும் அரசியல் காரணங்களுக்காக தடுத்து நிறுத்த முடியாது. சினிமாத்துறை என்பது மிகப்பெரிய தலைவர்களை உருவாக்கிய தாய்மடி. அதனால் திரைத்துறை சார்ந்த எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதை பரிசீலித்து நிர்வாக ரீதியாக சரி செய்யப்படும்.

- Advertisement -

சிறிய படங்களுக்கு பல ஆண்டுகளாகவே அதற்கான மானியம் கூட சரியாக சென்று சேர்வதில்லை. இதுகுறித்து முறையான ஒரு கமிட்டி அமைத்து எவையெல்லாம் சரி செய்ய முடியுமா அதை கவனித்து விரைவில் ஒரு அறிவிப்பு வெளிவரும். சிறிய படங்கள் தான் தமிழ் சினிமாவின் ஆக்சிஜன். சிறிய பட்ஜெட் படங்களை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாங்கள் துணை நிற்போம்.

சமீபத்தில் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்ததற்கு விமர்சனம் செய்த நண்பர் நடிகர் விஷாலுக்கும் சேர்த்து நான் வேலை பார்ப்பேன். அவரது நம்பிக்கையை பெறும் வகையில் சிறப்பாக பணியாற்றி தளபதி பெயரை காப்பாற்றுவேன். என்னை விஷாலுக்கு தெரியாமல் இருக்கலாம். நான் அவர் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன். எனக்கு அவரை பிடிக்கும்.

- Advertisement -

என் தொகுதியில் உள்ள சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ஒரு உதவி இயக்குனர் மகனாக முதல்வர் பிறந்தார். அவர் பிறந்த நாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். அன்று பல நலத்திட்டங்களை வழங்குவோம்.

அந்த நாளில் ஜனநாயகன் படம் வந்தால் அதுவும் எங்களுக்கு ஒரு பண்டிகை தான் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருக்கிறார். திரைப்படத்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமனம் குறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் விமர்சித்து இருந்தார். அதற்கு ராஜ்மோகன் தற்போது பதிலடி தந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்