- Advertisement -
Homeபொழுதுபோக்குகாதல் என்ற பெயரில் அஜித்தை ஏமாற்றிய நடிகை- இவருக்கு இப்படி ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கா?

காதல் என்ற பெயரில் அஜித்தை ஏமாற்றிய நடிகை- இவருக்கு இப்படி ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கா?

- Advertisement -

அஜித்தும் ஷாலினியும் “அமர்க்களம்” திரைப்படத்தில் நடித்தபோதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2000 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அஜித்குமார் ஷாலினிக்கு முன்பே ஒரு நடிகையை காதலித்திருக்கிறார். ஆனால் அந்த நடிகை அஜித்துக்கே அல்வா கொடுத்துள்ளார்.

“காதல் கோட்டை” திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர் ஹீரா. இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் ஹீரா. சொக்க வைக்கும் அழகால் பல ரசிகர்களை கைக்குள் போட்டுக்கொண்டவர் இவர்.

“காதல் கோட்டை” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இவர்கள் இருவருக்குள் காதல் மலர்ந்திருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் பிரேக்கப் ஆனது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட செய்யாறு பாலு, அஜித்-ஹீரா காதலை குறித்த சில அரிய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது அஜித்குமார் ஹீராவை காதலித்து வந்தபோது அவரை திருமணம் செய்துகொள்வதற்காக அவரது வீட்டிற்கே சென்று பெண் கேட்டாராம். அதே போல் ஹீராவுக்காக ஈசிஆரில் ஒரு பெரிய பங்களாவை கூட அஜித் வாங்கினாராம். ஆனால் ஹீரா அஜித்தை காதலித்து வந்த சமயத்திலேயே வேறு ஒரு நடிகருடன் தொடர்பில் இருந்தாராம். இதற்கு பிறகுதான் அஜித், ஹீராவை விட்டு விலகிவிட்டாராம். இவ்வாறு ஒரு தகவலை செய்யாறு பாலு அப்பேட்டியில் கூறியுள்ளார். இவ்வாறு ஷாலினியை காதலிக்கும் முன்பே அஜித்குமார் பிரபல நடிகை ஹீராவை காதலித்துள்ளார். இந்த செய்தியை நிச்சயம் பல ரசிகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சற்று முன்