தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். லிட்டில் சூப்பர் ஸ்டார் எஸ்டிஆர் சிம்பு என பல அடையாளங்கள் இவருக்கு உண்டு. காதல் அதிரடி என 2 விதமான படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். அப்பா டி ராஜேந்தரை போலவே தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய அடையாளமாக இருந்து வருகிறார்.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று, மாஸ் ஹிட் கொடுத்தது. அதற்கு பின் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த படமும் அதிக கவனம் பெற்றது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பத்துதல படம் தோல்வியடைந்தது.
இப்போது சிம்பு நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்த நடித்த தக்லைப் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படம் வருகிற ஜூன் 5ம் தேதிக்கு ரிலீஸ் ஆகிறது. இதில் சிம்பு வில்லன் கேரக்டரில் நடித்திருப்பதாக தெரிய வருகிறது.
துவக்கத்தில் நிறைய வெற்றிப் படங்களை தந்த நடிகர் சிம்பு, ஒருகட்டத்தில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு படப்பிடிப்பில் போதிய ஒத்துழைப்பு தராமல் அலைக்கழிக்கிறார் என்ற புகார் எழுந்தது. அதனால் அவரது சினிமா பயணத்தில் நிறைய இடைவெளியும் விழுந்தது. ஆனால் தற்போது நடிப்பில் அவர் தீவிரம் காட்ட துவங்கியிருக்கிறார்.
அவரது 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், 50வது படத்தை தேசிங்கு பெரியசாமி, 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்துவும் டைரக்ட் செய்ய உள்ளனர். இதில் எஸ்டிஆர் 49வது படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் ஷூட்டிங் துவங்க தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஆனால் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், இன்னும் படப்பிடிப்புக்கு நான் தயாராகவில்லை என்று கூறியிருக்கிறார். சிம்பு கால்ஷீட் தருவதே பெரிய விஷயம் என்ற நிலையில், அவர் தயாராக இருந்தும் இயக்குனர் இப்படி தாமதம் செய்து சொதப்புவது சிம்பு ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. இந்த படத்தில் கல்லுாரி பேராசிரியர், கல்லூரி மாணவராக சிம்பு நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், சிம்பு இந்த படத்தில் ரவுடி கேரக்டரில் நடிப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





