- Advertisement -
Homeபொழுதுபோக்குமதயானைக்கூட்டம் இயக்குனருடன் கைகோர்க்கும் சூரி... ஆனால் இது திரைப்படம் அல்ல... வெப் சீரிஸாம்... கதையில வச்சதுதான்...

மதயானைக்கூட்டம் இயக்குனருடன் கைகோர்க்கும் சூரி… ஆனால் இது திரைப்படம் அல்ல… வெப் சீரிஸாம்… கதையில வச்சதுதான் பெரிய ட்விஸ்டே…

- Advertisement -

நகைச்சுவை நடிகர் என்ற இடத்திலிருந்து கதாநாயகன் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தவர் சூரி. தொடர்ந்து காமெடியன் கதாபாத்திரமே பண்ணிக் கொண்டிருந்த அவர் ஒரு சமயத்தில் கேலி கிண்டலுக்கு ஆளானார். ஒரே மாதிரி கதாபாத்திரத்தையே சூரி செய்வதாகவும், இது காண்போர்க்கு சலிப்பை ஊட்டுவதாகவும் பலர் கூறி வந்தனர்.

இந்த சமயத்தில்தான் சூரிக்கு விடுதலை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கச்சிதமாக குமரேசன் என்னும் கதாபாத்திரத்தை கொடுத்து பெரும் வாய்ப்பு அளித்தார் வெற்றிமாறன். அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு சூரியும் குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் வாழ்ந்தார்.

அவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்து போயினர். இவ்வளவு பெரிய கலைஞர் சூரிக்குள் இருக்கிறாரா என்றும் ஆச்சரியப்பட்டனர். இப்படியான சூழலில், சூரிக்கு தொடர்ந்து கதாநாயகன் கதாபாத்திரம் வந்து கொண்டிருக்கிறது. இதில் அவர் நடித்த கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கமர்சியல் படமாக அது எடுக்கப்பட்டிருந்தது. அதில் ஆக்சன் ஹீரோவாக சூரி வலம் வந்தது பலரையும் கவனிக்க வைத்தது. குறிப்பாக முதல் பாதியின் இடைவெளியில், அசுர ஆட்டம் ஆடியிருப்பார் சூரி. தொடர்ந்து கொட்டுக் காளி திரைப்படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. பாராட்டை பெற்றது.

இந்த நிலையில் தற்போது சூரி மாமன் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க சூரி திட்டமிட்டுள்ளாராம்.

அவரது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை தான் படமாக்க சூரி முடிவு செய்து இருக்கிறார். இதில் நாட்டுப்புறக் கலைஞர் ஆன தந்தையின் கதாபாத்திரத்தை சூரியை ஏற்க உள்ளாராம். மதயானை கூட்டம் திரைப்படத்தைக் கொடுத்து பலரது பாராட்டையும் பெற்ற விக்ரம் சுகுமாரன் தான், இதனை இயக்க இருக்கிறார். கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சற்று முன்