- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதலில் அந்த விஷயங்களை தளபதி செய்யணும், அப்போ தான் அவரது அரசியல் எடுபடும் - நடிகர்...

முதலில் அந்த விஷயங்களை தளபதி செய்யணும், அப்போ தான் அவரது அரசியல் எடுபடும் – நடிகர் விஜய் குறித்து விமர்சித்த இயக்குனர் பேரரசு!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தனது 69வது படம் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்துக்கு அனிருத் இசைமைக்கிறார். பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்த படத்துக்கு பிறகு சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு நடிகர் விஜய், தனது முழு கவனத்தையும் தமிழ்நாட்டு அரசியலில் செலுத்த திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக தமிழ்நாடு முழுவதும் மக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ள விஜய், அதற்கான மக்கள் சந்திப்பு சுற்றுப் பயண ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு சில படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்து மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதில் இயக்குனர் பேரரசு இயக்கிய சிவகாசி மற்றும் திருப்பாச்சி ஆகிய 2 படங்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கமர்ஷியல் ஹிட் கொடுத்த இந்த 2 படங்களும் விஜய்க்கு இன்றளவும் பேசப்படும் படங்களாக உள்ளன.

இந்த படங்களின் இயக்குனர் பேரரசு தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனராக இருந்து வருகிறார். திருவண்ணாமலை தர்மபுரி பழனி திருத்தணி என தொடர்ந்து பேரரசு இயக்கிய பல படங்கள் ஊர்களின் பெயர்களில் டைட்டில்கள் இருந்து மாபெரும் வரவேற்பை பெற்றன. ஊர் பெயர் டைட்டில் டைரக்டர் என்ற பெயரும் பேரரசுவுக்கு உண்டு.

இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து சமீபத்தில் இயக்குனர் பேரரசு விமர்சித்து பேசியிருக்கிறார். அப்போது பேரரசு கூறியதாவது, ஒரு அரசியல் கட்சி வளர வேண்டும் என்றால், ஆளுங்கட்சியை எதிர்த்தால்தான் வளர முடியும். அந்த விஷயத்தில் நடிகர் விஜய் தெளிவாக இருக்கிறார். ஆளும் கட்சி குறித்த தனது விமர்சனங்களை அவர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

ஆனால் கட்சி ஆரம்பித்து 2ம் ஆண்டு துவங்கிய நிலையில் இன்னும் வெறும் அறிக்கைகள்தான் கட்சித் தலைவர் விஜய் தரப்பில் இருந்து வந்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் களத்தில் இறங்கி அவர் செயல்பட வேண்டும். ஆழம் பார்த்துதான் இறங்குவார் என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் மக்களையும் பத்திரிகையாளர்களையும் அவர் சந்திக்க வேண்டும் என்று இயக்குனர் பேரரசு கூறியிருக்கிறார்.

சற்று முன்