- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் 2 படம் துவக்க பூஜை விழாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா? அப்செட்...

மூக்குத்தி அம்மன் 2 படம் துவக்க பூஜை விழாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா? அப்செட் ஆன நடிகை நயன்தாரா!

- Advertisement -

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் அதிக சம்பளம் சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாராவும் மற்றொருவர் திரிஷாவும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை வாங்குகிறார். திரிஷா ரூ. 6 கோடி முதல் ரூ, 8 கோடி வரை வாங்குகிறார்.

தெலுங்கு நடிகை விஜயசாந்தியை லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து வந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக நடிகை நயன்தாராவுக்கு அப்படி ஒரு பெயர் அடைமொழியாக இருந்தது. ஆனால் சமீபத்தில் அவரே வெளியிட்ட அறிக்கையில் என்னை நயன்தாரா என்று மட்டுமே அழையுங்கள், லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

- Advertisement -

நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். அந்த படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோ காட்சிகளை, தங்களது திருமண ஆல்ப வீடியோவில் இணைத்த நிலையில், அதை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கும் பல கோடி ரூபாய்க்கு விற்று நயன்தாரா, விக்னேஷ் சிவன் கணிசமான லாபம் பார்த்தனர்.

இப்போது நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 9ம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை நடத்தப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழலில் கடந்த 6ம் தேதி சுந்தர் சி இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் துவக்க விழா பூஜை நடந்தது. இந்த விழாவில் நடிகை நயன்தாரா மற்றும் மீனா குஷ்பு ரெஜினா கசாண்ட்ரா அபிநயா இயக்குனர் சுந்தர் சி ரவி மோகன் யோகிபாபு துனியா விஜய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது நடிகை நயன்தாராவை முதலில் மேடைக்கு அழைக்கவில்லை என்றும், அங்கிருந்த ரெஜினா கசாண்ட்ராவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டதாகவும் மீனாவையே பலரும் பெரிய அளவில் கவனித்து கொண்டதாகவும் செல்பி என்ற பெயரில் குஷ்பு, தனது மொபைல் போனில் ரெஜினா கசாண்ட்ராவை விட்டு என் அனுமதியின்றி போட்டோ எடுக்க சொன்னது தவறு என்றும் பல சர்ச்சைகளை நயன்தாரா தரப்பில் இருந்து கிளப்பியதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்