- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்தத் திரைப்படத்தால் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு இத்தனை கோடி நஷ்டமா... சோதனை மேல் சோதனை...

அந்தத் திரைப்படத்தால் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு இத்தனை கோடி நஷ்டமா… சோதனை மேல் சோதனை போதுமடா சாமி…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசைக்கு என்று இங்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்கள் யுவன் சங்கர் ராஜாவின் தீவிர ரசிகர்களாக இங்கு இருக்கிறார்கள். 2000 ஆண்டில் தொடங்கி அவரது ஹிட் பாடல்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

தற்போதும் அவர் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதுபோக முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் யுவன் சங்கர் ராஜாவின் கச்சேரியும் நடைபெறுகிறது. இப்படி இசை ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் யுவன் சங்கர் ராஜா.

ஆனால் அவருக்கு இதில் கை மேல் பலன் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இவரது தயாரிப்பில் முதல் திரைப்படமாக பியார் பிரேம காதல் வெளியானது. இளன் இயக்கியிருந்த இந்தத் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார். இளைஞர்களை கவரும் வகையில் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக ஓரளவு பேசப்பட்டது.

ஆனால் பியார் பிரேமா காதல் வசூலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தையும் தயாரித்தார் யுவன் சங்கர் ராஜா. தர்மதுரை திரைப்படத்தை தொடர்ந்து மிகவும் எதார்த்தமான முறையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது.

சில முக்கியமான நிகழ்ச்சிகளிலும் இந்த திரைப்படம் விருதுகளை அள்ளியது. ஆனால் வசூலில் கொஞ்சம் கூட முன்னேறவில்லை இந்த மாமனிதன். இப்படியான சூழலில் தற்போது ஸ்வீட் ஹார்ட் எனும் திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். ரியோ கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் அண்மையில் வெளியானது.

ஏற்கனவே ரியோ நடித்த ஜோ படம் நல்ல வரவேற்பு பெற்றதால் இதன் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதனை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பெரிய அளவுக்கு ஸ்வீட் ஹார்ட் படம் ரீச் ஆகாததால், படம் தோல்வியை தழுவிதாக பலரும் கூறி வருகின்றனர். 5 கோடி ரூபாய்க்கு தமிழ்நாட்டில் விநியோகிக்கப்பட்ட இந்த திரைப்படம், ஒரு கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் யுவன் சங்கர் ராஜாவுக்கு 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

சற்று முன்