சில படங்கள் மட்டுமே எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நெருக்கமான படங்களாக அமைந்து விடும். அந்த வகையில் கடந்த 2010ம் ஆண்டில் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடித்திருந்தார். நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் இந்த படத்தில் நடிகர் சந்தானம் தல தளபதி சலூன்கடை உரிமையாளராக நடித்திருந்தார், விஜயலட்சுமி லட்சுமி ராமகிருஷ்ணன் சித்ரா லட்சுமணன் சுப்பு பஞ்சு சுவாமிநாதன் மொட்டை ராஜேந்திரன் ஷகிலா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கேமியோ ரோலில் நடிகர் ஜீவாவும் நடித்திருந்தார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த படம் இப்போது ரி ரிலீஸ் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மத்தியில் இப்போது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக ஆர்யா சந்தானம் கூட்டணி காமெடி மாஸ் ஹிட்டாக அமைந்தது.
கடந்த பல ஆண்டுகளாக ஹிட் ஆன தமிழ் படங்கள் 2ம் பாகங்களாக எடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. மேலும் படத்தின் கதை திரைக்கதையை உருவாக்கும் போதே 2 பாகங்களை அந்த படத்தை எடுப்பது என்று இயக்குனர்கள் முடிவு செய்வது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அதனால் எந்த ஹிட் படம் வந்தாலும் அதன் 2ம் பாகம் வந்துவிடும் என்று உறுதியாக இனி நம்பலாம்.
ஆனால் அப்படி 2ம் பாகமாக வெளிவரும் படங்களில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த சூழலில் 15 ஆண்டுகளுக்கு முன் மாஸ் ஹிட் கொடுத்த பாஸ் என்கிற பாஸ்கரன் படம் 2ம் பாகமாக எடுக்கப்பட வேண்டும் என்ற ஆசை பல நாட்களாக ரசிகர்களிடம் நீடித்து வருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் எம் ராஜேஷிடம் அடிக்கடி கேட்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் எம் ராஜேஷ் இதுபற்றி கூறுகையில், அருமையான ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது. ஆர்யா நயன்தாரா சந்தானம் என அனைவரும் இணைந்தால் மீண்டும் அனைவரும் சேர்ந்து நடித்தால் நிச்சயமாக 2ம் பாகம் படம் உருவாகி விடும் என்று கூறியிருக்கிறார். படத்தின் நாயகன் ஆர்யா முன்வந்தாலும் நடிகை நயன்தாரா நடிகர் சந்தானம் ஆகியோர் ஒத்துழைத்தால் மட்டுமே இந்த படம் மீண்டும் 2ம் பாகமாக உருவாகும் என்பதை இயக்குனர் எம் ராஜேஷ் திட்டவட்டமாக கூறிவிட்டார்.





