- Advertisement -
Homeபொழுதுபோக்குகனா படத்திற்காக மட்டும் தான் அதை பண்ணேன். மத்தபடி என்னோட டயட் இதுதான் - ஐஸ்வர்யா...

கனா படத்திற்காக மட்டும் தான் அதை பண்ணேன். மத்தபடி என்னோட டயட் இதுதான் – ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி

- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த 2010-ஆம் ஆண்டு “நீதானே அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதன் பிறகு “அவர்களும் இவர்களும்”, “உயர்திரு 420”, “சட்டப்படி குற்றம்”, “விளையாடவா” போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்படாமல் இருந்தது.

Aishwarya-Rajesh-1

ஆனால் 2012-ஆம் ஆண்டு வெளியான “அட்டக்கத்தி” படத்தில் அமுதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் அனைவரது மத்தியிலும் கவனத்தை பெற்ற நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் உருவெடுத்தார். அதன்பிறகு புதுயுகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினி என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்தார். அதேபோன்று 2015 ஆம் ஆண்டு வெளியான காக்கா முட்டை படம் அவரது கரியருக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான “கனா” என்கிற படத்தில் கௌசல்யா முருகேசன் கதாபாத்திரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனையாக நடித்த அவரது நடிப்பு பலருக்கு மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது. அந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது உடல் எடையை குறைத்து நடித்தது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில் : நான் எப்பொழுதுமே சைஸ் ஜீரோவாக இருந்ததில்லை. அதேபோன்று டயட்டும் செய்தது கிடையாது. நன்றாக சாப்பிடுவேன், நல்லா தூங்குவேன். அதனால் இப்போது வரை டயட் என்பது எனக்கு கிடையாது. அப்பப்போ உடற்பயிற்சிகளை மேற்கொள்வேன். ஆனால் என்னுடைய உடற்பயிற்சியாளர் என்னிடம் ஒரே ஒரு விடயத்தை மட்டும் தான் அடிக்கடி கூறுவார். “ஐஸூ நீங்க ஒல்லியாக வேண்டும் என்று மட்டும் நினைக்காதீர்கள்” உங்களை யாருக்குமே பிடிக்காது.

இப்போது நீங்கள் கரெக்டாக இருக்கிறீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு நீங்கள் இப்படி இருந்தால் தான் உங்களை மிகவும் பிடிக்கும் என்று கூறுவார். அதே போன்று நானும் எப்பொழுதும் ஒல்லியாக வேண்டும் என்று நினைத்ததே கிடையாது. கானா படத்தில் மட்டும்தான் அந்த கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்தேன். மற்றபடி என்னுடைய டயட் என்பது பெரிய அளவில் உடலை வருத்திக் கொள்ளக்கூடியதெல்லாம் கிடையாது. நான் நன்றாக சாப்பிடுவேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்