- Advertisement -
Homeபொழுதுபோக்குதங்கலான் திரைப்படத்தின் கதை இதுதான்... கசிந்த தகவல்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்...

தங்கலான் திரைப்படத்தின் கதை இதுதான்… கசிந்த தகவல்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…

- Advertisement -

2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் ஏராளமான திரைப்படங்கள் பட்டியலில் உள்ளன. அதிலும் ரஜினிகாந்த்திற்கு வேட்டையன் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகிறது. தீபாவளி சமயத்தில் இந்த படம் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்படுகிறது.

இதேபோல் மணிரத்னம் இயக்கும் தக் லைப் படமும் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் விஜய்க்கு கோட் திரைப்படமும், அஜித்திற்கு விடா முயற்சி திரைப்படமும் வெளியாகின்றன. தனுஷின் ஐம்பதாவது படம், சூர்யாவின் கங்குவா உள்ளிட்ட படங்களும் போட்டியில் உள்ளன.

- Advertisement -

இதில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது தங்கலான் திரைப்படம். சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் எந்த திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இதில், மாளவிகா மோகனன், பார்வதி மேனன், பசுபதி, ஹாலிவுட் நடிகர் டானியல் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தில், இருக்கும் விக்ரமின் தோற்றம்தான். அடர்ந்த தாடி, நீண்ட முடி என மிரட்டலாக காட்சி இருக்கிறார் விக்ரம். சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் காட்சியில் விக்ரமின் தோற்றத்தைக் கண்டு பலரும் ஆச்சரியமடைந்தனர்.

- Advertisement -

இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் ஏற்கனவே, குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிஜி மற்றும் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாகியதால், படத்தின் வெளியிட்டு தேதி ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி போயிருக்கிறது.

இப்படியான சூழலில் தங்கலான் திரைப்படத்தின் கதை ஒன்று வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலைச் சுற்றி தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம். ஆங்கிலேயர் காலத்தில், தொழிலாளர்களைக் கொண்டு அவர்கள் தங்கத்தை வெட்டி எடுக்க அவர்களின் அடக்கு முறையை இந்த திரைப்படம் விளக்குகிறதாம். அந்த சமயத்தில் இந்த சாதிய வேறுபாடு குறித்தும் தங்கலான் திரைப்படம் பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதால், அதற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்