தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ரஜினி விஜய் அஜீத்குமார் சூர்யா தனுஷ் சியான் விக்ரம் ஜெயம் ரவி சிம்பு உள்ளிட்ட முக்கிய ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் அஜீத்குமாருடன் பில்லா விஸ்வாசம் ஆரம்பம் ஏகன் உள்ளிட்ட படங்களில் நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கிறார்.
எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் துணிவு படத்தில் நடித்த பிறகு அடுத்து நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் அஜீத்குமார் நடிப்பதாக இருந்தது. கதை எல்லாம் கேட்டுவிட்டு ஓகே சொன்ன நடிகர் அஜீத்குமார், கடைசியில் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு, இயக்குனர் மகிழ் திருமேனிக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார்.
டாப் ஸ்டார் நடிகரான அஜீத்குமார் நடிக்கும் படத்தை இயக்கினால் தனது கணவர் விக்னேஷ் சிவன் இமேஜ் தமிழ் சினிமாவில் உச்சத்துக்கு போகும் என எதிர்பார்த்த நயன்தாராவுக்கு, இது பெரிய அதிர்ச்சியை தந்தது. இதுகுறித்து சிலமுறை அஜீத்குமாரிடம் நயன்தாரா பேச முயற்சித்தும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் அஜீத்குமார் நடித்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க மறுத்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது இந்தியில் இருந்து தமிழில் ரீ மேக் செய்யப்பட்ட படம்தான் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் அஜீத்குமார் நாயகனாக வக்கீல் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தை எச் வினோத் டைரக்ட் செய்திருந்தார்.
இந்த படத்தை தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் ரீமேக் செய்து நடித்திருந்தார். இந்தியிலும் தமிழிலும் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நடிகை நயன்தாராவை, நடிகர் பவன் கல்யாண் அணுகியுள்ளார். ஆனால் இந்த படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா மறுத்துவிட்டார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள பவன் கல்யாணுடன் ஜோடியாக நடிக்க விருப்பம் இருந்தும், தமிழில் அஜீத்குமார் நடித்த படம் என்பதால் இந்த படத்தில் நடிக்க நயன்தாரா விரும்பவில்லை என்றும், இந்த படத்தில் அவரது கேரக்டர் அதிக முக்கியத்துவம் இல்லாத சின்ன கேரக்டர் என்பதால் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் 2 விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. அதன்பிறகு அந்த கேரக்டரில் நடிகர் கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





