- Advertisement -
Homeபொழுதுபோக்குஅறிவிப்பு பலகை வைத்து கடும் விமர்சனத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - உங்கப்பாவை மறந்துட்டீங்களே… என...

அறிவிப்பு பலகை வைத்து கடும் விமர்சனத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – உங்கப்பாவை மறந்துட்டீங்களே… என குமுறும் துணை நடிகர்கள்!

- Advertisement -

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது அன்று முதல் இன்று வரை எப்போதுமே குதிரைக் கொம்புதான். நடிகர் நடிகை இயக்குனர் தயாரிப்பாளர் என சினிமாத்துறை சார்ந்தவர்களின் வாரிசுகள் எளிதாக சினிமாவில் நுழைந்துவிட முடியும். ஆனால் சினிமா பின்புலமே இல்லாதவர்கள் சினிமாவில் வாய்ப்பு பெறுவது என்பதே பெரிய ஒரு சம்பவம்தான்.

ஆரம்பகாலத்தில் ரஜினிகாந்த் விஜயகாந்த் சத்யராஜ் போன்றவர்களே சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் போது பிரபல இயக்குனர்கள் பிரபல தயாரிப்பாளர்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்களது புகைப்படம், முகவரி, அவர்கள் தங்கியிருக்கும் வாடகை அறை தொலைபேசி எண்களை கொடுத்துவிட்டு வருவதுதான் வழக்கமாக இருந்தது. அப்படிதான் வாய்ப்புகளை தேடி பெற வேண்டிய சூழல் இருந்தது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவரது அலுவலகம் போயஸ்கார்டனில் உள்ளது. அங்கு அவர் இயக்கும் அல்லது அவர் தயாரிக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு பல புதுமுக நடிகர் நடிகைகளும், ஏற்கனவே படங்களில் நடித்த துணை நடிகர்களும் அங்கு வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் தனது அலுவலகத்தின் முன்பகுதியில், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் ஒரு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதில், நடிக்க வாய்ப்பு தேடி வரும் அன்பர்கள் நேரில் சந்திக்க வேண்டி காத்திருக்கவோ, காலிங் பெல் அழுத்தி பணி இடையூறு செய்யவோ வேண்டாம்.

- Advertisement -

உங்கள் தொடர்பு எண்ணுடன் கூடிய புகைப்படத்தை இங்கே வைக்கப்பட்டுள்ள பிரத்யேக பெட்டியில் போட்டுவிட்டு செல்லவும். வாய்ப்பு இருப்பின் தக்க நேரத்தில் நீங்கள் அழைக்கப்படுவீர் என்று அந்த அறிவிப்பு பலகையில் வாசகங்கள் காணப்படுகின்றன. இது தற்போது புதுமுக நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் மத்தியில் பெரிய கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்க அப்பாவும் எங்களைப் போன்று தான் நமக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று ஆபீஸ் ஆபீஸ் ஆக சென்று போட்டோ கொடுத்து இருப்பார். வாய்ப்பைத் தேடி வரும் கலைஞர்களின் போட்டோவை ஒரு ஆபீஸ் பாய் வச்சு வாங்கி வைக்க முடியாதா? குடிக்க ஒரு டம்ளர் தண்ணீர் தரக்கூடாதா? உங்க அப்பாவுக்கு எங்க கஷ்டம் புரியும். ஆனா பணக்கார வீட்டு பெண்ணாக வளர்ந்த உங்களுக்கு தெரியாது என்று இதுகுறித்து துணை நடிகர்கள், புதுமுக நடிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்