- Advertisement -
Homeபொழுதுபோக்குஇடியாப்ப சிக்கலில் கார்த்தியின் வா வாத்தியார் படம் - கடை எப்ப சார் திறப்பீங்க என...

இடியாப்ப சிக்கலில் கார்த்தியின் வா வாத்தியார் படம் – கடை எப்ப சார் திறப்பீங்க என வடிவேலு பாணியில் படம் எப்ப சார் ரிலீஸ் செய்வீங்க என கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் சிவக்குமாரின் மகன் நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளங்களை கடந்து ஒரு நல்ல நடிகராக தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களை கொடுத்துக்கொண்டு இருப்பவர் நடிகர் கார்த்தி. கடந்த 2007ம் ஆண்டில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நாயகனாக தன் நடிப்பை அழுத்தமாக வெளிப்படுத்தி அசத்தினார்.

கார்த்தி நடித்த கொம்பன் தோழா கடைக்குட்டி சிங்கம் கைதி சர்தார் ஆல் இன் ஆல் அழகுராஜா நான் மகான் அல்ல என பல படங்கள் பெரிய வெற்றி பெற்ற நிலையில் காஷ்மோரா தேவ் ஜப்பான் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் மெய்யழகன் படம் வெளியானது. இதில் முக்கிய கேரக்டரில் நடிகர் அரவிந்த் சாமி நடித்திருந்தார்.

இயக்குனர் நலன்குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த படம் வா வாத்தியார். இந்த படம் கடந்த ஆண்டிலேயே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் படப்பிடிப்பே முடியவில்லை. இதுவரை 160 நாட்கள் வா வாத்தியார் படப்பிடிப்பு நடந்த நிலையில் இன்னும் 20 நாட்கள் கார்த்தியின் கால்ஷீட் தேவைப்படுவதாக இயக்குனர் நலன் குமாரசாமி கண்டிஷனாக கூறியிருக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் ஷூட்டிங் 160 நாட்கள் நடந்த நிலையில் இன்னும் 20 நாட்கள் என்பதை ஏற்க முடியாது என அவர் மறுத்திருக்கிறார். அதே வேளையில் இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் ஓடிடி தளம் கடந்த ஆண்டிலேயே இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்க வேண்டும். 2025 ஜனவரிக்குள் வெளியிட்டு விடலாம் என தயாரிப்பாளர் உறுதியளித்த நிலையில் இப்போது ஏப்ரல் மாதமே முடிய போகிறது.

அதனால் வா வாத்தியார் படத்தை வாங்கியுள்ள அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் தயாரிப்பாளருக்கு பலத்த நெருக்கடியை கொடுத்து வருகிறது. இந்த சூழலில் நடிகர் கார்த்தியிடம் 20 நாள் கால்ஷீட் கேட்ட போது, இதுவரை எடுக்கப்பட்ட படத்தை பார்த்த கார்த்தி, இப்போது சர்தார் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். அதனால் அந்த படத்தை முடித்துவிட்டுதான் 20 நாட்கள் ஒதுக்க முடியும் என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

நடிகர் கார்த்தி நடித்த காஷ்மோரா படம்தான் அவர் அதிக நாட்கள் நடித்த படமாக இருந்தது. இப்போது வா வாத்தியார் படம் 160 நாட்கள் கடந்து அந்த சாதனையை முறியடித்து விட்டது. 20 நாட்கள் கார்த்தியின் கால்ஷீட் கேட்கும் இயக்குனர், சர்தார் 2 முடியும் வரை தர முடியாது என்று கூறிய ஹீரோ, படத்தை விரைவில் தர நெருக்கடி தரும் அமேசான் பிரைம் ஓடிடி தளம் என இடியாப்ப சிக்கலில் வா வாத்தியார் படம் திக்குமுக்காடி திணறி வருகிறது.

சற்று முன்