- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் மாநாடு நடத்த குடைச்சல் தரும் ஆளுங்கட்சி? பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக வெற்றிக்...

அரசியல் மாநாடு நடத்த குடைச்சல் தரும் ஆளுங்கட்சி? பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் – ஆச்சரியத்தில் தமிழக அரசியல் கட்சிகள்

- Advertisement -

நடிகர் விஜயின் அரசியல் வருகை என்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை பரபரப்பை ஏற்படுத்தும் என்பது சந்தேகம் இல்லை. ஏனெனில் நடிகர் விஜயக்கு நல்ல ஆதரவும் செல்வாக்கும் தமிழக மக்கள் மத்தியில் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் விஜய், கடந்த மாதத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி, கட்சியின் பாடலையும் வெளியிட்டார்.

தொடர்ந்து தனது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து மக்களிடம் தெரிவிக்க முதல் அரசியல் மாநாடு நடத்த அவர் ஏற்பாடுகளை செய்து வருகிறார். வருகிற 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அவர் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஆளுங்கட்சி உத்தரவால் போலீசார் செய்த குறுக்கீடுகளும் நிபந்தனைகளும் காரணமாக அவரால் அந்த தேதியில் மாநாடு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இதையடுத்து வருகிற அக்டோபர் 15ம் தேதி மாநாடு நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து ஆளுங்கட்சி தரப்பில் நெருக்கடிகளும் குறுக்கீடுகளும் இடையூறுகளும் இருந்து வருவதால், நடிகர் விஜய் எப்படி இதை எதிர்கொள்ளப் போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் குழப்பம் நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் விஜய் இன்று பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் விஜய் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆளுங்கட்சி திமுக தரப்பில் தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வரும் விஜய் பிரதர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பாஜகவின் ஆதரவை அவர் பெறுவாரா என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது.

- Advertisement -

அதேபோல் ஈவேராவின் பிறந்த நாளுக்காக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமை தலைகளை அறுத்தெறிந்தவர். ஈவேரா பிறந்த நாளில் அவர் வலியுறுத்திய பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதி ஏற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈவரா பிறந்த நாளுக்கு வாழ்த்து அறிக்கை வெளியிட்டது மட்டுமின்றி இன்று எழும்பூரில் உள்ள ஈவேரா நினைவிடத்திற்கு நேரில் சென்று விஜய் அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார் விஜய். கட்சி துவங்கிய பின் பொதுவெளியில் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் நடைமுறையை இன்று முதல் செயல்படுத்த துவங்கி இருக்கிறார் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்