- Advertisement -
Homeபொழுதுபோக்கு14 ஆண்டுகளுக்கு பின் சுந்தர் சி - வடிவேலு காமெடி காம்போ; 4 நாட்களில் கேங்கர்ஸ்...

14 ஆண்டுகளுக்கு பின் சுந்தர் சி – வடிவேலு காமெடி காம்போ; 4 நாட்களில் கேங்கர்ஸ் படம் செய்த வசூல் – மதகஜ ராஜா வசூலை முந்தியதா?

- Advertisement -

கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் மதகஜ ராஜா. சுந்தர் சி இயக்கத்தில் 2012ம் ஆண்டில் இயக்கப்பட்ட இந்த படம் 2013ம் ஆண்டில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. பிறகு பல்வேறு பிரச்னைகளால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டது. பிறகு 12 ஆண்டுகள் கழித்து கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது.

இந்த படத்தில் நாயகனாக விஷால் நாயகிகளாக அஞ்சலி வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் காமெடி ரோலில் நடிகர் சந்தானம் நடித்திருந்தார். ஆர் சுந்தர்ராஜன் நிதின் சத்யா சடகோபன் ரமேஷ் மணிவண்ணன் மனோபாலா சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தில் வில்லனாக சோனு சூட் நடித்திருந்தார்.

மதகஜ ராஜா படத்துக்கு நடிகர் விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். காதல் காமெடி கவர்ச்சி ஆக்சன் என வழக்கமான ஜாலியான ஜானரில் உருவான மதகஜ ராஜா படம் படம் ரிலீஸான 2 வாரங்களில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 12 ஆண்டுகள் கழித்து வந்தும் மாபெரும் வெற்றியை பெற்ற ஒரு படம் தமிழ் சினிமாவில் மதகஜ ராஜாவாக தான் இருக்கும்.

இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள கேங்கர்ஸ் படம் கடந்த 24ம் தேதி வெளியானது. தலைநகரம் வின்னர் லண்டன் கிரி ரெண்டு நகரம் மறுபக்கம் என பல படங்களில் சுந்தர் சி வடிவேலு காமெடி காம்போ பெரிய அளவில் வரவேற்கப்பட்ட நிலையில் கேங்கர்ஸ் படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது.

ஏனெனில் நாய் சேகர் வக்கீல் வெடிமுத்து கிரிகாலன் மேஜிக் ஷோ வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர் கைப்புள்ள பேக்கரி ஓனர் வீரபாகு என சுந்தர் சி படங்களில் வடிவேலு ஏற்று நடித்த இந்த காமெடி கேரக்டர்கள் பெரிய அளவில் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதனால் கேங்கர்ஸ் படத்தில் வரும் வடிவேலு கேரக்டர் பெரிய டிரண்டிங் ஆக மாறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கேங்கர்ஸ் படம் ரிலீஸாகி 4 நாட்கள் ஆன நிலையில் இதுவரை வசூல் நிலவரம் பெரிய அளவில் இல்லை. முதல் நாளில் 2.2 கோடி 2ம் நாளில் 4.2 கோடி 4ம் நாளில் ரூ. 9 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது. இந்த வசூல் நிலவரம் படக்குழுவுக்கு பெரிய உற்சாகத்தை தரவில்லை. அதே நேரத்தில் 12 ஆண்டுகள் கழித்து வெளியான மதகஜ ராஜா படம் 4 நாட்களில் ரூ. 23 கோடி என்ற அபார வசூலை செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்