- Advertisement -
Homeபொழுதுபோக்கு50 வருஷமா ஜெயிச்ச ஒருவரை இசையில் நிலைச்சு நின்ற அண்ணன் இளையராஜா பத்தி தப்பா எழுதலாமா?...

50 வருஷமா ஜெயிச்ச ஒருவரை இசையில் நிலைச்சு நின்ற அண்ணன் இளையராஜா பத்தி தப்பா எழுதலாமா? – கங்கை அமரன் ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்து இசை துறையில் சாதனையாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. மிக விரைவில் அவரது சிம்பொனி அரங்கேற்றம் நடைபெற உள்ளது. இதற்கிடையே அவர் தனிபட்ட முறையில் பல்வேறு விமர்சனங்களை சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

குறிப்பாக அவர் இசையமைத்த பாடல்ளை இன்றைய படங்களில் தனது அனுமதி பெறாமல் பயன்படுத்த கூடாது என்று காப்பிரைட் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்வது தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர் நடிகர் பயில்வான் ரங்கநாதன், இளையராஜா குறித்து கடுமையாக விமர்சித்து ஒரு வீடியோவில் பேசியிருந்தார்.

- Advertisement -

இதுபற்றி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியதாவது, எங்களை பத்தி சரியா எழுதுங்க. இளையராஜாவுக்கு இட்லிக்கு வழியில்லே, தோசைக்கு வழியில்லே அந்த மாதிரி எல்லாம் எழுதாதீங்க. இளையராஜா நல்ல நிலைமையில் இருக்கிறார். வீட்டுல வந்து பாருங்க தெரியும்.

அவ்வளவு பெரிய ஆள் வளர்ந்த மனிதர், 50 வருஷமா இசையில் நிலைச்சு நின்ற ஒரு மனிதர் பத்தி தப்பாக எழுதி கீழே எறக்கணுமா? அனாதையா இருக்கார், அப்படி இருக்காருன்னு அண்ணன் இளையராஜா குறித்து பயில்வான் ரங்கநாதன் தவறாக சில விஷயங்களை பேசியிருக்கிறார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்டே ஆகணும். நிறைய தப்பு தப்பா சொல்லியிருக்கிறார். அது சரியல்ல.

- Advertisement -

எங்களை நேசிச்சு கொண்டு போங்க. ஏன்னா 50 வருஷம் வாழ்ந்திருக்கோம். எனக்கு வயசு 78 ஆகுது. அண்ணனுக்கு 82 வயசுக்கு மேல ஆகுது. எனவே எங்களை காப்பாத்தறதுக்கான வழியை பாருங்க. இத்தனை வருஷமாக நாங்க வேலை செஞ்சுக்கிட்டு இருக்கோமே ஐயா? அதை பாருங்க. 70களில் இருந்து வாசிக்கிட்டு இருக்கோம்.

மியூசியனாக இருக்கிறோம். இன்னிக்கு வரைக்கும் இருக்கிறோம். எங்களை குறை சொல்ல வேணாம். எங்களை பத்தி எழுதலைன்னா கூட வேண்டாம். ஆனா இல்லாததை எழுதி எங்களை கேவலப்படுத்துவது ரொம்பவும் கஷ்டமான விஷயமா இருக்குது என்று கங்கை அமரன் அந்த நிகழ்ச்சியில் வருத்தமாகவும் ஆவேசமாகவும் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்