- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே இத்தனை கோடி ரூபாய் பார்த்து விட்டதா... தொடர்...

என்னது விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே இத்தனை கோடி ரூபாய் பார்த்து விட்டதா… தொடர் தோல்விகளை கொடுத்த போதும் சீயானுக்கு எகிறும் மவுசு…

- Advertisement -

சீயான் விக்ரம் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வினுடன் கைகோர்த்து இருக்கிறார். மடோன் அஸ்வின் தனது முதல் திரைப்படம் ஆன மண்டேலாவின் மூலம் தேசிய விருதை பெற்றார். யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. ஒரே ஒரு குறை படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது.

 

- Advertisement -

இதற்குப் பிறகு மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயனுடன் கை கொடுத்தார். எதற்கெடுத்தாலும் பயப்படும் ஒரு இளைஞர் எப்படி வீரனாகிறான் என்ற ஒன் லைன் தான் படத்தின் கதை என்றாலும், அதில் பேண்டஸியை கொண்டு வந்து சுவாரசியப்படுத்தி கதையை எழுதியிருந்தார் அஸ்வின். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

 

- Advertisement -

சிவகார்த்திகேயனுக்கும் இந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. இப்படியான சூழலில் தான், மடோன் அஸ்வினுக்கு தனது அடுத்த திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை விக்ரம் கொடுத்திருக்கிறார். கதை தேர்வில் தற்போது மிகுந்த கவனம் செலுத்தி வரும் விக்ரம், இந்த இயக்குனருடன் இணைந்து இருப்பது எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.

 

கடந்த காலங்களில் விக்ரம் திரைப்படங்கள் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தன. எந்த ஒரு திரைப்படமும் பிரம்மாண்ட வெற்றியை ருசிக்கவில்லை. இதனால் நடிகரும் சற்று அப்சட்டில் இருக்கிறார். அவர் மலை போல் நம்பிய தங்கலான் திரைப்படமும் கைவிட்டது. பா ரஞ்சித் அந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

 

ஆனால் அந்த திரைப்படத்தின் வசனங்களே புரியவில்லை என்றும், பா ரஞ்சித் படத்தில் என்ன சொல்ல வருகிறார் என கடைசிவரை தெரியவில்லை எனவும் பலர் குறை கூறினர். தயாரிப்பு நிறுவனம் என்னவோ தங்கலான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது என்று கூறினாலும், அது அனைத்து தரப்பு மக்களையும் கவரவில்லை என்பது தான் உண்மை.

 

இப்படியான சூழலில் தற்போது சித்தா பட இயக்குனர் அருண்குமாருடன் சீயான் விக்ரம் வீரதீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்திருக்கிறார். எஸ்ஜே சூர்யா வில்லனாகவும், துஷாரா விஜயன் படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து டீசர் ரிலீஸ் செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு இது வெளியாகும் நிலையில், திரையரங்கு உரிமம் உள்பட பல்வேறு வகையில் 100 முதல் 120 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இயக்குனரும், சியான் விக்ரமும்தான் காரணம் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

 

- Advertisement -

சற்று முன்