- Advertisement -
Homeபொழுதுபோக்குதேவர் மகன் படத்துக்கு பிறகு நான் மனசுல வலியோட நடிச்ச படம் இதுதான் - மேடையில்...

தேவர் மகன் படத்துக்கு பிறகு நான் மனசுல வலியோட நடிச்ச படம் இதுதான் – மேடையில் வெளிப்படையாக பேசிய நடிகர் வடிவேலு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் நடிகர் வடிவேலு. தனிப்பட்ட முறையில் பல விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும் ஒரு காமெடி கலைஞனாக தமிழ் சினிமாவில் அவர் வெளிப்படுத்திய உழைப்பும் நடிப்பும் ரசிகர்களை சிரிக்க வைத்த அவரது திறமையும் என்றும் பாராட்டுகளுக்கு உரியது.

நடிகர் விஜயகாந்துடன் மோதல் இயக்குனர் ஷங்கருடன் பிரச்னை திமுகவுக்கு ஆதரவு என பல பிரச்னைகளால் 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு இப்போது மீண்டும் நடித்து வருகிறார். இந்த 2வது சுற்றில் அவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

குறிப்பாக சிவலிங்கா சந்திரமுகி 2 வம்பு சண்டை போன்ற படங்களில் அவரது காமெடி ரசிகர்களை மகிழ்விக்கவில்லை. அதே நேரத்தில் மாமன்னன் படத்தில் அவரது குணச்சித்திர நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு காமெடி அவருக்கு கம்பேக் தந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வடிவேலு பேசியதாவது, என்னுடைய மனைவி நல்ல நகைச்சுவை சிந்தனையாளர். அவர் கிராமத்தில் இருந்து வந்தவர். பெயர் விசாலாட்சி. எங்க அம்மா பேரு பாப்பா. என்னோட அப்பா பேரு நடராஜன்.

- Advertisement -

இப்படி ஒரு குடும்பம். வீட்டுக்குள் போனா ஒரே சோகமா இருக்கும். வெளியே வந்தால் ஒரே நகைச்சுவையாக இருப்பேன் நான். எங்க அம்மா பட்ட கஷ்டத்தை எல்லாமே சின்ன வயசுல இருந்து நான் பார்த்தவன். அப்படி ஒரு காலகட்டத்தில் தான் தேவர்மகன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சது.

தேவர் மகன் படத்துல என் கஷ்டத்தை எல்லாம் காட்டி நடிச்சேன். அந்த தேவர் மகன் படத்துக்கு பின்னால என் மனசுல இருக்கிற வலி எல்லாம் சொல்ல வெச்சது என்னுடைய அன்பு சகோதரர் இயக்குனர் மாரி செல்வராஜ்தான் என்று அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வடிவேலு பேசினார். அருகில் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜூம் உடனிருந்தார்.

- Advertisement -

சற்று முன்