தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு படைப்பாளியாக முக்கிய இயக்குனராக மாரி செல்வராஜ் வலம் வருகிறார். கடந்த 2018ம் ஆண்டில் அவர் இயக்கிய முதல் படம் பரியேறும் பெருமாள் வெளியானது. நடிகர் கதிர் நடிகை கயல் ஆனந்தி நடிகர்கள் யோகி பாபு மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் படம் மாரி செல்வராஜூக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்து உதயநிதி ஸ்டாலின் வடிவேலு கீர்த்தி சுரேஷ் பகத் பாசில் ஆகியோர் நடித்த மாமன்னன் படமும் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படமும் நல்ல கவனம் பெற்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றி படங்களை கொடுத்தவர் சீயான் விக்ரம். அவரது மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான படம் ஆதித்ய வர்மா. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்த படம் பைசன் காளமாடன்.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ரெஷிஜா விஜயன் பசுபதி கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. சமீபத்தில் பைசன் காளமாடன் படத்தின்பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பைசன் காளமாடன் படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன்படி இந்த படம் வருகிற அக்டோபர் 17ம் தேதி ஜீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியாகும் 5வது படமாகும். முந்தைய அவரது 4 படங்களுமே வெற்றிப் படங்களாகும்.
இயக்குனர் மாரி செல்வராஜ் செய்துள்ள அந்த எக்ஸ் பதிவில், தீப்பிடித்து எரியும் வனத்துக்குள் இருந்து தீப்பிழம்பாய் தீபாவளிக்கு வருகிறான் தெக்கத்தி காளமாடன் பைசன் என்று அந்த படத்தின் போஸ்டருடன் மாரி செல்வராஜ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார். இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.





