- Advertisement -
Homeபொழுதுபோக்குஎடிட் செய்த பிறகு அந்த 2 படங்களும் எனக்கு திருப்தி தரவில்லை, அதனால் மீண்டும் படப்பிடிப்பு...

எடிட் செய்த பிறகு அந்த 2 படங்களும் எனக்கு திருப்தி தரவில்லை, அதனால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தினேன் – இயக்குனர் எழில் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

ஒரு திரைப்படத்தின் முதல் ரசிகன் அந்த படத்தின் இயக்குனர்தான். ஒரு இயக்குனர் தன்னுடைய படத்தை இயக்கி முடித்து எடிட்டிங் செய்த பிறகு முழுமையாக பார்க்கும் போது அந்த படம் மனதுக்கு முழு அளவில் திருப்தி தந்தால் மட்டுமே ரசிகர்களையும் அந்த படம் கண்டிப்பாக திருப்திப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

ஆனால் இன்று தமிழ் சினிமாவில் வரும் பல படங்கள் அந்த படத்தின் இயக்குனர் கடைசியாக அந்தப் படத்தை ஒரு முறையாவது பார்த்தாரா? அல்லது அந்த படத்தில் நடித்த ஹீரோவாவது அவர் நடித்த அந்த படத்தை ஒரு முறை பார்த்தாரா என்று யோசிக்கும் அளவுக்கு தான் திரையில் பல படங்கள் இருக்கின்றன.

- Advertisement -

மொக்கையான படங்கள் என்றால் கூட பரவாயில்லை. காட்டு மொக்கையான படங்களை தந்து தமிழ் சினிமா ரசிகர்களை சில இயக்குனர்கள் மிகவும் கொடுமைப்படுத்தி சோதித்து பார்த்து வருகின்றனர். சில படங்களை ஓடிடி தளங்களில் 30 நிமிடம் கூட தொடர்ந்து பார்க்க முடியாத நிலையில், தியேட்டர்களுக்கு சென்ற ரசிகர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் எழில் பல நல்ல வெற்றிப் படங்களை கொடுத்தவர். துள்ளாத மனமும் துள்ளும் தீபாவளி மனம் புத்தி பறவை தேசிங்கு ராஜா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். நல்ல கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கான படங்களை இயக்கி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் எழில் கூறியதாவது, நான் ஒரு படத்தை இயக்கி முடித்த பிறகு எடிட்டிங் செய்து படத்தை பார்க்கும்போது அந்த படம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் மறுபடியும் படப்பிடிப்பு செய்வேன். அதேபோல் தேசிங்குராஜா படத்தை எடிட்டிங் செய்து பார்த்தபோது எனக்கு திருப்தியாக இல்லை. அதனால் தேசிங்குராஜா படத்தின் ஓபனிங் காட்சிகளை மாற்றினேன். அதற்காக 5 நாட்கள் மறுபடியும் படப்பிடிப்பு நடத்தினேன்.

அதன் பின்னர் வெள்ளைக்கார துரை படத்திற்கும் இதே போல் எடிட்டிங் செய்து பார்த்தபோது படம் திருப்தியாக எனக்கு இல்லை. எடிட்டிங்கில் பிடிக்காத காட்சிகளை பிரித்து விட்டு பார்த்தால் வெறும் ஒரு மணி நேரம்தான் படம் நன்றாக இருந்தது. இதனால் வெள்ளைக்கார துரை படத்தை 24 நாட்கள் திட்டமிட்டு 15 நாட்கள் மறுபடியும் படப்பிடிப்பு நடத்திதான் திரைக்கு கொண்டு வந்தோம் என்று இயக்குனர் எழில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்