- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னும் 100 நாட்களில்… கூலி படம் டீசர் வெளியிட்ட படக்குழு - தலைவர் விசில் சத்தம்...

இன்னும் 100 நாட்களில்… கூலி படம் டீசர் வெளியிட்ட படக்குழு – தலைவர் விசில் சத்தம் காதை பிளக்குதே… உற்சாகத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

வேட்டையன் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள முதல் படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பே கூலி படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இப்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து படத்தின் பிரமோ பணிகள் துவங்க இருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் தலைமையில் அதற்கான திட்டங்கள் உருவாகி வருகின்றன.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தை முடித்த பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடித்து வருகிறார். சென்னை கேரளா ஆகிய பகுதிகளில் 2 ஷெட்யூல் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினி கலந்துக்கொள்கிறார்.

கூலி படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கு இன்னும் 100 நாட்கள் இருக்கின்றன. மே மாதம் இன்று 6ம் தேதி என்ற நிலையில் மே மாதம் 25 நாட்கள், ஜூன் மாதம் 30 நாட்கள் ஜூலை மாதம் 31 நாட்கள் ஆகஸ்ட் 14 நாட்கள் என மொத்தம் சரியாக வரும் 100வது நாளில் கூலி படம் ரிலீஸாக உள்ளது.

- Advertisement -

இதையடுத்து கூலி படக்குழு சார்பில் எக்ஸ் பதிவில் ஒரு டீஸர் வெளியாகி உள்ளது. 27 நொடிகள் மட்டுமே வரும் இந்த டீசரில் இந்த படத்தின் நடித்துள்ள மலையாள நடிகர் சவுபின் சாஹிர் கன்னட நடிகர் உபேந்திரா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் சத்யராஜ் ஆகியோரது பின்புற தலை பகுதிகள் மட்டுமே காட்டப்படுகின்றன.

அடுத்து நடிகர் ரஜினிகாந்தை பின்புறமாக இருந்து முன்புறமாக ஸ்டாண்ட் அப்பில் காட்டுகின்றனர். பிறகு ரஜினிகாந்த் வாயில் விரல் வைத்து விசிலடிப்பதுடன், கூலி இன்னும் 100 நாட்களில் என்ற வாசகங்களுடன் டிரெய்லர் முடிவடைகிறது. இதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தலைவர் வருகை இன்னும் 100 நாட்களில் என உற்சாகமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://x.com/sunpictures/status/1919731398258393536

- Advertisement -

சற்று முன்