தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகளை ரசிகர்கள் நீண்ட காலத்துக்கு மறக்க மாட்டார்கள். ஏனெனில் சில படங்களில் நடித்த போதிலும் அவர்களது அழுத்தமான நடிப்பும், அழகும் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக தங்கி விடும். அப்படிப்பட்ட பல மாஜி கதாநாயகிகள் இப்போதும் 40, 45 வயதுகளை கடந்தும் ரீ என்ட்ரி கொடுத்து, ரசிகர்களை குஷிப்படுத்துகின்றனர்.
அந்த வகையில், 1990களில் வானவில் என்ற படத்தில் அறிமுகமானவர் அபிராமி. கேரளாவை சேர்ந்தவர். வானவில் படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து சார்லி சாப்ளின், மிடில் கிளாஸ் மாதவன் ஆகிய படங்களில் நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார்.
அதே போல் நடிகர் சரத்குமாருக்கு சமுத்திரம் மற்றும் தோஸ்த் ஆகிய படங்களில் அபிராமி ஜோடியாக நடித்திருந்தார். அபிராமி நடித்த படங்களில் மிக முக்கியமானது நடிகர் கமல்ஹாசனுடன் நடித்த விருமாண்டி படம்தான். இந்த படத்தில் அன்னலட்சுமி கேரக்டரில் அபிராமி நடிப்பு பேசப்பட்டது. உன்னை விட உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல என்ற பாடலில் கமலுடன் மிக நெருக்கமாக அபிராமி நடித்தது சர்ச்சையை கிளப்பியது.
விருமாண்டி படத்துக்கு பிறகு, சரியாக படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை அபிராமி, பிறகு திருமணம் செய்துக்கொண்டு கேரளாவில் செட்டிலாகி விட்டார் என்று கூறப்பட்டது. பள்ளி காலத்தில் இருந்தே தன்னுடன் படித்த மாணவரை அபிராமி காதலித்த நிலையில் அவரையே திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன் மாதவன் நடிப்பில் வெளியான மாறா என்ற படத்தில், சில காட்சிகளில் அபிராமி நடித்திருந்தார். ஆனால் ஸ்லிம் ஆன அபிராமி காணாமல் போய், ஆண்ட்டியாக காணப்பட்ட அபிராமியை பார்த்து, ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். எனினும் அப்படி ஒரு பருமனான தோற்றத்திலும் ரசிகர்களை கவர்ந்தார் அபிராமி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர்களில் நடிக்க ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் தவிர்த்தால் அம்மா நடிகை இல்லை. அதனால் அம்மா கேரக்டரில் நடிக்க அபிராமிக்கு வாய்ப்புகள் குவிகிறது. இப்போது தக்லைப், வேட்டையன் படங்களில் நடித்துள்ள அபிராமிக்கு, பல படங்களில் அம்மா கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகிறது. இதனால் இனி அம்மாவாக அழகான அபிராமி ஆண்ட்டியை ரசிகர்கள் ரசித்து பார்க்கலாம்.





