தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் சமீபத்திய படங்கள் சிறிது சறுக்களை சந்தித்து இருந்த வேளையில் மீண்டும் தற்போது அண்மையில் வெளியாகிய “மாவீரன்” படத்தின் மூலம் இழந்த தனது மார்க்கெட்டை மீண்டும் பிடித்திருக்கிறார். இதன் காரணமாக அடுத்தடுத்த படங்களில் தற்போது பிசியாக நடித்துக் கொண்டும் இருக்கிறார்.

மேலும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் அண்மையில் வெளியாகி இருந்தது. மாவீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது கமலஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடைபெற்று வரும் பெயரிடப்படாத “எஸ்கே 21” படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சாய் பல்லவியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பானது காஷ்மீரில் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடைசியாக ஏ ஆர் முருகதாஸின் இயக்கத்தில் தர்பார் படம் வெளியாகி தோல்வியை சந்தித்திருந்த வேளையில் தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து அவர் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் ஆகியோர் இணையம் இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டாக தற்போது அந்த படத்தில் நடிக்கப்போகும் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில் “சீதாராமம்” படத்தில் நூர்ஜகானாக நடித்திருந்த மிருனால் தாகூர் தான் சிவகார்த்திகேயன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.





