- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரதீப் ரங்கநாதன் நடித்த 2 படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகிறதா? - முந்தப் போவது யார்...

பிரதீப் ரங்கநாதன் நடித்த 2 படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகிறதா? – முந்தப் போவது யார் என ஆவலாக எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நாயகனாக நடித்த இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கேமியோ ரோலில் ஆட்டோ டிரைவராக பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்தார். இந்த படம் அபார வெற்றியை பெற்றது.

தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், அந்த படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். இளம் காதலர்கள் மத்தியில் மொபைல் போன் ஏற்படுத்தும் பாதிப்புகளை கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. மாபெரும் வெற்றியை பெற்றது.

- Advertisement -

லவ் டுடே படத்தில் ராதிகா சரத்குமார் சத்யராஜ் யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் பல காட்சிகளில் பிரதீப் ரங்கநானின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். இதையடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படமும் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

தொடர்ந்து 3 படங்களில் இயக்குனராக கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நடிகர் பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே என்ற படத்திலும் இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டுயூட் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணிசெய்த கீர்த்திஸ்வரன் இயக்கும் டுயூட் என்ற படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக பிரேமலு பட நடிகை மமிதா பைஜூ நடித்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் டுயூட் படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடித்து வந்த எல்ஐகே படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று கூறப்படும் நிலையில் டுயூட் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாளில் 2 படங்களும் ரிலீஸ் செய்வது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை தந்துள்ளது. ஆனால் ஒரே நடிகர் நடித்த 2 படம் ஒரே நாளில் ரிலீஸாக வாய்ப்பில்லை. இதில் இரண்டில் ஒன்றுதான் தீபாவளிக்கு ரிலீஸாகும், மற்ற ஒரு படம் கிறிஸ்துமஸ் பொங்கல் என தள்ளிப் போகும் என்றும் தகவல் வெளியாகி உளளது.

- Advertisement -

சற்று முன்