- Advertisement -
Homeபொழுதுபோக்கு“அடுத்து நீதான்டி சாவப்போற”- வடிவேலு சொன்ன அந்த வார்த்தை, பிரபல காமெடி நடிகரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட...

“அடுத்து நீதான்டி சாவப்போற”- வடிவேலு சொன்ன அந்த வார்த்தை, பிரபல காமெடி நடிகரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட சம்பவம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. தமிழ் சினிமா உள்ளவரை அவரது நகைச்சுவைகளும் நிலைத்து நிற்கும். ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல், சமீப காலமாக வடிவேலுவின் காமெடிகள் எடுபடவில்லை.

அவரது அணியில் இருந்த அல்வா வாசு, முத்துக்காளை, சிங்கமுத்து, பாவா லட்சுமணன், சிசர் மனோகர் போன்ற பலரையும் அவர் ஒதுக்கிவிட்டார். இவர்கள் அனைவரும் வடிவேலுவின் காமெடிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள். மேலும் சிங்கமுத்து வடிவேலுவுக்காக பல காமெடி காட்சிகளை எழுதியுள்ளார். இடையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நில தகராறு இவர்கள் இருவரையும் பிரித்தது.

- Advertisement -

அதன் பின் காலப்போக்கில் தன்னுடன் இருந்த பலரையும் ஒதுக்கித்தள்ளினார் வடிவேலு. சமீப நாட்களாகவே வடிவேலுவுடன் நடித்த பலரும் அவரின் மோசமான குணம் குறித்து பல பேட்டிகளில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த பேட்டிகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நாம் மிகவும் ரசித்த வடிவேலு, கேமராவிற்கு பின்னால் ஒரு கொடுங்கோலனாக இருக்கிறாரே என ரசிகர்கள் பலரும் கோபமடைந்தனர். இவ்வாறு வடிவேலுவின் மற்றொரு முகம் குறித்து பலரும் பகிர்ந்து வரும் நிலையில், நடிகர் முத்துக்காளை சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.

- Advertisement -

அப்போது வடிவேலு சொன்ன சில வார்த்தைகளால் தான் மதுப்பழக்கத்தை நிப்பாட்டியது குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது முத்துக்காளை ஒரு காலகட்டத்தில் குடிக்கு அடிமையாக இருந்தாராம். ஒரு நாள் ஒரு படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்திருக்கிறார் முத்துக்காளை. அப்போது வடிவேலு, “முதல்ல அல்வா வாசு இந்த குடியால செத்துப்போவான், அதுக்கப்புறம் இந்த முத்துக்காளை செத்துப்போவான்” என்று கூறியிருக்கிறார்.

அதன் பின் மறுவாழ்வு மையத்திற்குச் சென்று குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்தி சில ஆண்டுகளுக்கு முன்பு மதுப்பழக்கத்தை மொத்தமாக நிறுத்திவிட்டாராம். அல்வா வாசு கடந்த 2017 ஆம் ஆண்டு கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்