- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விமலுக்கு இப்படி ஒரு வாய்ப்பா? அந்த மலையாள பட இயக்குனரின் சூப்பர் ஹிட் படத்தில்...

நடிகர் விமலுக்கு இப்படி ஒரு வாய்ப்பா? அந்த மலையாள பட இயக்குனரின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்கப் போறாரா? – இது தரமான சம்பவம்தான்!

- Advertisement -

மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படம் மஞ்சும்மெல் பாய்ஸ். இந்த படம் கடந்த ஆண்டில் இந்த படம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தின் கதைக்களம் மிகவும் எளிதானது. ஆனால் படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பு மிகவும் பலமானது.

கேரளாவில் இருந்து 10 பேர் கொண்ட நண்பர் குழு, கொடைக்கானலில் குணா குகைக்கு பிக்னிக் வருகிறது. அங்கு குகைக்குள் செல்லும் நண்பர்களில் ஒருவர், அங்குள்ள ஆபத்தான பாதாளத்துக்குள் விழுந்து விடுகிறார். அந்த நண்பனை மற்ற நண்பர்கள் அனைவரும் சேர்ந்து போராடி உயிருடன் மீட்பதுதான் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் கதை.

- Advertisement -

இந்த படம் மலையாளமும் தமிழும் கலந்த இருமொழி படமாக வெளியானது. அதனால் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதுவும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடல் வரிகளை பயன்படுத்தி படத்துக்கு 100 சதவீத வைப் ஏற்றி வெறித்தனமான வெற்றியை இயக்குனர் சிதம்பரம் பெற்றுவிட்டார்.

ஏறக்குறைய மஞ்சம்மெல் பாய்ஸ் படத்தின் கதையை ஒத்திருந்தது 2017ம் ஆண்டில் இயக்குனர் கோபி நயினார்இயக்கியிருந்த அறம் படமும். இதில் கதையின் பிரதான நாயகியாக கலெக்டர் கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார். ஆழ்குழாய் கிணறுக்குள் தவறி விழுந்த சிறுமியை மீட்பதுதான் இந்த படத்தின் கதையும். ஆனால் சப்ஜெக்ட் ஒன்றாக இருந்தாலும் குணா படத்தின் பாடலால் மஞ்சும்மெல் பாய்ஸ் பெரிய கவனத்தை ரசிகர்களிடம் பெற்றுவிட்டது.

- Advertisement -

மஞ்சும்மெல் பாய் படத்தை இயக்கியவர் சிதம்பரம். இவர் மலையாளத்தில் முதலில் இயக்குனராக அறிமுகமான படம் ஜான் இ மேன். இந்த படம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி வெளியாகி பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. சியர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் இந்த ஜான் இ மேன் என்ற மலையாளப் படத்தை தயாரித்திருந்தது.

இந்த படத்தில் பசில் ஜோசப் லால் பாலு வர்கீஸ் அர்ஜூன் அசோகன் கணபதி எஸ் பொதுவால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்ற படமாகும். இப்போது இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து எடுக்க உள்ளனர். இந்த படத்தை இயக்குனர் சிதம்பரத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் நாயகனாக விமல் நடிக்கிறார். அதனால் இந்த படம் நடிகர் விமலுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்