- Advertisement -
Homeபொழுதுபோக்குமல்ட்டி ஸ்டார்ஸ் படங்கள் கலாசாரத்தை தொடங்கி வைத்தது நான் அல்ல, பழைய சினிமாக்களை பாருங்க...

மல்ட்டி ஸ்டார்ஸ் படங்கள் கலாசாரத்தை தொடங்கி வைத்தது நான் அல்ல, பழைய சினிமாக்களை பாருங்க – இப்படி சொன்னது அட இவரா

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது புது டிரெண்டிங் ஒன்று நடைமுறையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது, ஒரே படத்தில் நான்கைந்து ஹீரோக்கள் இணைந்து நடிப்பதுதான். இப்போது புதிதாக வந்த பல படங்கள், வரப்போகும் சில படங்கள் எல்லாமே, இப்படி மல்ட்டி ஸ்டார்ஸ் நடித்த படங்களாகவே இருக்கின்றன. அதாவது பிரதான ஹீரோ ஒருவருடன் நான்கைந்து ஹீரோக்கள் நண்பனாக, வில்லனாக ஏதோ ஒரு விதத்தில் அந்த படங்களில் வருகின்றனர்.

துவக்கத்தில் ஒரே சமகாலத்தில் முன்னணியில் உள்ள இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பதே தமிழ் சினிமாவில் அதிசயமாக இருந்தது. அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி, கூண்டுக்கிளி என்ற படத்தில் இணைந்து நடித்தனர். ஆனால், அது இருவருமே பெரிய ஹீரோக்கள் ஆகாத ஆரம்ப காலகட்டம். பிறகு முன்னணி கதாநாயகன்களாக மாறிய பிறகு, அவர்கள் இருவரும் ஒரே படத்தில் நடிக்கவே இல்லை.

அதேபோல் ரஜினி கமல் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்தனர். பிறகு இப்படியே இருந்தால், நாம் இருவரும் தனிப்பட்ட வளர்ச்சி காண்பது சிரமம். அதனால், தனித்தனியாக நடித்தால்தான் இருவரும் சினிமாவில் பெரிய வெற்றியாளர்களாக மாற முடியும் என, அவர்களுக்குள் கலந்து பேசி முடிவெடுத்து, இருவரும் இணையாக நடிப்பதை தவிர்த்தனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மல்ட்டி ஸ்டார் என்ற முறையில் நிறைய ஹீரோக்கள் ஒரே படத்தில் நடிப்பது டிரெண்டிங் ஆகி விட்டது. இது ஒரு விதத்தில் மக்களை ஏமாற்றி, அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கும் கார்பரேட் தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குநர்களின் யுக்தி, ஸ்டார் வேல்யூ காட்டி, ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரழைக்கும் பிளான் என கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

உதாரணமாக விக்ரம் படத்தில் கமலுடன் நரேன், பகத் பாசில், சூர்யா, லியோ படத்தில் விஜயுடன் அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ரஜினி 170 படத்தில் அமிதாப், ராணா, பகத்பாசில், விஜய் 68 படத்தில் அர்ஜூன், மைக் மோகன், பிரசாந்த், ஜெயராம், பிரபுதேவா என ஸ்டார்ஸ் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

இதுகுறித்து, சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்ற ஒரு நேர்காணலில் அவரிடம் கேட்கப்பட்டது. விக்ரம், லியோ படங்களில், மல்ட்டி ஸ்டார்ஸ் கலாசாரத்தை உருவாக்கி விட்டதே நீங்கள்தான் என கூறப்படுகிறதே என்றதற்கு, அப்படி நான்தான் காரணம் எனக் கூற முடியாது. தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பே ஊமை விழிகள், இணைந்த கைகள் போன்ற படங்கள் வந்திருக்கின்றன. அந்த படங்களில் மல்ட்டி ஹீரோக்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள் என பதில் அளித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

சற்று முன்