- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட்?.. நயன்தாரா ஆக ஐஸ்வர்யா திட்டம்?.. வெளியானது போஸ்டர்

அடுத்த ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட்?.. நயன்தாரா ஆக ஐஸ்வர்யா திட்டம்?.. வெளியானது போஸ்டர்

- Advertisement -

வளர்ந்துவரும் நடிகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த நடிகையாக தற்போது திகழ்ந்துகொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பா.இரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படத்தின் மூலம் அவர் அடையாளப்பட்டாலும் அறியப்பட்டாலும் அதற்கு முன்னதாகவே மானாட மயிலாட நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டிருந்தார்.அந்த சூட்டோடு உயர்திரு 420, சட்டப்படி குற்றம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து நடித்துவந்தாலும் ஒரு பெரிய திருப்புமுனை எதுவும் அவருக்கு அமையாமல் இருந்த சூழலில்தான் வெளியானது காக்கா முட்டை திரைப்படம். மணிகண்டன் இயக்கியிருந்த அந்தப் படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. வளர்ந்துவரும் காலகட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலாக அந்தக் கேரக்டரை ஏற்றிருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதற்கு பெரும் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. அதனை சமீபத்திய பேட்டியில்கூட அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஒருவழியாக அந்தப் படத்துக்கு பிறகு மீண்டும் வாய்ப்புகள் கிடைத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவரது கரியரில் அடுத்த முக்கிய படமாக அமைந்தது வடசென்னை. வடசென்னைக்கு பின் வாய்ப்புகள் வந்தாலும் செலக்ட்டிவ் கதைகளில் மட்டுமே நடிக்கிறார். அதிலும் ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். அப்படி அவர் நடித்த படங்கள்தான் டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா.

இந்நிலையில் மலையாள இயக்குநர் சாஜன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜுடன் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் ஐஸ்வர்யா. இதில் செம்பன் வினோத், லிஜோ மோல் (ஜெய்பீமில் நடித்தவர்). ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, பாலச்சந்திர மேனன், ஜானி ஆண்டனி, கிருஷ்ண பிரபா, சோனா நாயர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜோஜு ஏற்கனவே நடித்த இரட்டா படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது. கதை,திரைகக்தை, வசனம்,இயக்கம், எடிட்டிங் ஆகியவைகளை சாஜன் கவனிக்க, வேணு கேமராமேனாக பணியாற்றுகிறார். சாஜனும், வேணுவும் ஏற்கனவே இணைந்து நல்ல படங்களை கொடுத்திருப்பதால் இதன் இதன் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஐன்ஸ்டீன் சாக் பால், ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் இணைந்து லாண்ட் சினிமாஸ் மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா கம்பெனி மூலம் படத்தை தயாரித்திருக்கின்றனர். இஷான் தேவ் என்பவர் இசையமைக்க, அனில் ஜான்சன் பின்னணி இசையமைத்திருக்கிறார். அதேபோல் கலை டிப்பார்ட்மெண்ட்டை ஜித்து கவனிக்க, பாடல் வரிகளை ரஃபிக் அகமது எழுதியிருக்கிறார்.

Pulimada

படத்துக்கு புலிமடா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் Scent Of A Woman (பெண் வாசனை) என்ற டேக் லைனும் இருக்கிறது. இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் பெண் வாசனை என்று டேக் லைன் இருப்பதன் காரணமாக புலிமடா ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட்டாக இருக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராஜேஷின் சமீபத்திய கதை தேர்வை பார்க்கும்போது நயன்தாரா எப்படி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்வு செய்கிறாரோ அதேபோல் இவரும் செய்கிறார். எனவே நயன்தாராவாக மாற ஐஸ்வர்யா முயற்சி செய்கிறாரோ எனவும் சமூக வலைதளங்களில் கேட்டுவருகின்றனர்.

சற்று முன்