- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதர்வாவும் ப்ரியா ஆனந்த்தும் லிவிங் டூ கெதரில் இருந்தார்கள்.. பரபரப்பை பற்ற வைத்த பயில்வான் ரங்கநாதன்

அதர்வாவும் ப்ரியா ஆனந்த்தும் லிவிங் டூ கெதரில் இருந்தார்கள்.. பரபரப்பை பற்ற வைத்த பயில்வான் ரங்கநாதன்

- Advertisement -

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்தவர் முரளி. இவரது மகன் அதர்வா. கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படம் சுமாரான வரவேற்பைப் பெற்றாலும் அதர்வாவின் நடிப்பும் படத்தின் பாடல்களும் பெரிதும் பேசப்பட்டன. அதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.

அந்தப் படத்துக்கு பிறகு முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்தார் அதர்வா. வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு படம் உருவாகியிருந்தாலும் ஏதோ காரணத்தால் படத்துக்கு போதிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. முதல் இரண்டு படங்களுமே சுமாராக போனாலும் அதர்வா நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். இப்படிப்பட்ட சூழலில்தான் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்தார்.

- Advertisement -

பாலா எப்போதும் ஒரு நடிகரை மாற்றிக்காட்டிவிடுவார் என்பது மீண்டும் அந்தப் படத்தின் மூலம் நிரூபனமானது. படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக அதர்வா நல்ல நடிகர் என்ற இடத்திலிருந்து சிறந்த நடிகர் என்ற இடத்துக்கு நகர்ந்தார். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் அதர்வாவின் நடிப்பு தனித்து ஜொலித்தது.

பரதேசி படத்துக்கு பிறகு வித்தியாசமான கேரக்டர்கள் தனக்கு வரும் எதிர்பார்த்திருந்த அவருக்கு கமர்ஷியல் ரீதியிலான கதாபாத்திரங்களே கிடைத்தன. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தினார். இருந்தாலும் ஒரு மெகா ஹிட்டுக்காக அதர்வா இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் மத்தகம் வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியானது. முதல் சீசன் முடிவடைந்து இரண்டாவது சீசன் அக்டோபரில் வெளியாகிறது.

- Advertisement -

இந்நிலையில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் அதர்வாவும், ப்ரியா ஆனந்த்தும் லிவிங் டூ கெதரில் இருந்ததாக கூறியிருக்கிறார். அவர் பேசிய வீடியோ ஒன்றில், “அதர்வாவும், ப்ரியா ஆனந்த்தும் ஒரு படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பை அடுத்து இரண்டு பேரும் லிவின் டூ கெதரில் இருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். அதற்கு காரணம் அதர்வாதான்.

அதர்வா அந்த உறவை முறித்துக்கொண்டதால் ப்ரியா ஆனந்த் மன வேதனையில் இருந்தார். அதன் காரணமாகத்தான் சில காலம் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார்.” என்றார். ப்ரியா ஆனந்த்தும், அதர்வாவும் இரும்புக்குதிரை படத்தில் ஒன்றாக நடித்தனர். ப்ரியா ஆனந்த் இப்போது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்