- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனது எனது எனது எனது எனதே இந்த உலகம் எல்லாம்… - பாடல் வரிகளுடன் வெளியான...

எனது எனது எனது எனது எனதே இந்த உலகம் எல்லாம்… – பாடல் வரிகளுடன் வெளியான குபேரா டீசர் – வேற லெவல்ல வெறித்தனமா இருக்குதே?

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் ராயன். இது அவரது 50வது படமாக இருந்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். படம மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஏஆர் ரகுமான் குரலில் உசுரே நீதானே… பாடல் வரி செம டிரண்டிங்கில் இருந்தது. இது நடிகர் தனுஷ் இயக்கிய 3வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராயன் படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் வெளியான படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமானார். அனிகா சுரேந்திரன் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை வெற்றியை பெறவில்லை.

- Advertisement -

தொடர்ந்து நடிகர் தனுஷ் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பிறகு ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. ஏனெனில் அதே நாளில் நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியானது. ஆனால், பாடல் காட்சி மற்றும் சில காட்சிகள் மீதம் உள்ளதால் இட்லி கடை ரிலீஸ் தேதி தள்ளி போனதாக படக்குழு தரப்பில் காரணம் கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தேரே இஸ்க் மெயின் என்ற இந்தி படத்தில் நடித்தார். அதற்கு முன்பாக தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்திலும் தனுஷ் நடித்தார். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்திருந்தார். முக்கிய கேரக்டரில் நாகர்ஜூனா நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 20ம் தேதி ரிலீஸ் என கூறப்படுகிறது.

- Advertisement -

ஆனால் அதே வாரத்தில் ஜூன் 12ம் தேதி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் நடித்த ஹரிஹர வீரமல்லு படம் வெளியாக உள்ளதால் 2 வாரங்களுக்கு ஆந்திராவில் போதிய தியேட்டர்கள் கிடைக்காது. அதனால் குபேரா படத்தை ஜூன் 20ம் தேதியில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில வாரங்கள் குபேரா ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடித்துள்ள குபேரா படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. தனுஷ் நாகர்ஜூனா ராஸ்மிகா மந்தனா நடித்துள்ள சில காட்சிகள் வேற லெவலில் இருக்கின்றன. பிச்சைக்காரன் குபேரனாக எப்படி மாறுகிறான் என்பதே படத்தின் மையக்கரு. எனது எனது எனது எனது எனதே இந்த உலகம் என்ற பாடல் ஒலிக்க குபேரா டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இணையத்தில் வைரலாகி வருகிறது.

குபேரா படத்தின் டீசரை காண இங்கே கிளிக் செய்யவும் –https://youtu.be/T5-4bVZZ5fA?si=6rp7R4v-1kTBN8nl

- Advertisement -

சற்று முன்