- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 31ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் ஆகும் ரெட்ரோ... அது எப்படி திமிங்கலம் நடக்கும்...

வரும் 31ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் ஆகும் ரெட்ரோ… அது எப்படி திமிங்கலம் நடக்கும்…

- Advertisement -

சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் நடிப்பில், கடந்த ஒன்றாம் தேதி ரெட்ரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். படத்தில் சிறிது நேரமே வந்திருந்தாலும் தனது காட்சிகளை நிறைவாக செய்திருந்தார் சுவாசிகா. கடந்த ஒன்றாம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

தூத்துக்குடியில் பெரிய ரவுடியாக இருக்கிறார் ஜோஜு ஜார்ஜ். அவரது மனைவியான சுவாசிகா, சூர்யாவை வளர்ப்பு மகனாக தத்தெடுக்கிறார். உடல் நலக்குறைவால் சுவாசிகா உயிர் இழக்க, முழுக்க முழுக்க ஜார்ஜின் அரவணைப்பில் முரடனாக சூர்யா வளர்கிறார். அப்போது பூஜா உடனான சந்திப்பில் காதல் மலர்கிறது.

காதலிக்காக அடிதடியை உதறிவிட்டு திருமணத்திற்கு தயாராகிறார். அந்த சமயத்தில்தான் தங்க மீன் என்னும் ஒரு சமாச்சாரத்தை, சூர்யா மடைமாற்றம் செய்ய தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல் முற்றுகிறது. இதனால் திருமணம் தடைபட சூர்யாவும் ஜெயிலுக்கு செல்கிறார். பிறகு தனது காதலி பூஜாவை தேடி அந்தமான் புறப்படுகிறார் அவர்.

அங்கு ஜமீன்தாராக இருக்கும் நாசர், ஒரு தரப்பு மக்களை மிகவும் அடிமைப்படுத்துகிறார். அவர்களுக்கும் அந்தமான் செல்லும் சூர்யாவுக்கும் என்ன தொடர்பு, தனது காதலியை கரம் பிடித்தாரா சூர்யா, தங்க மீன்கள் என்றால் என்ன என்பதைத்தான் இந்த திரைப்படம் விவரிக்கிறது. படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் அது வசூலில் எந்த ஒரு குறையையும் வைக்கவில்லை.

உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 235 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதாவது திரையரங்கு, ஓடிடி உரிமம், டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றை சேர்த்து இத்தனை கோடி ரூபாய் வசூல் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல பலரும் இந்த திரைப்படம் பிடித்திருப்பதாகவே சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இப்படியான சூழலில், ரெட்ரோ திரைப்படம் வரும் 31ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. netflix இல் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் ஒன்றாம் தேதி திரைப்படம் வெளியான நிலையில் அந்த மாதத்தின் கடைசியிலேயே ஓடிடியில் இது வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.

சற்று முன்