- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி… சூர்யா நடிப்பில் வாடிவாசல் - 2 படங்களும் எப்போது ரிலீஸ் தெரியுமா?...

சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி… சூர்யா நடிப்பில் வாடிவாசல் – 2 படங்களும் எப்போது ரிலீஸ் தெரியுமா? – பண்டிகையை கொண்டாடுங்கடே…

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இது அவரது 25வது படமாகும். இந்த படத்தில் அதர்வா ஜெயம் ரவி ஸ்ரீ லீலா ஆகியோரும் நடிக்கின்றனர். கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் கடந்த 1960 முதல் 1965ம் ஆண்டு வரை நடந்த இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை மையப்படுத்தி இந்த கதைக்களம் உருவாகி உள்ளது. மதுரை எம்பி சு வெங்கடேசன் இந்த படத்தின் கதை வசனத்தை எழுதியிருக்கிறார். இது ஏற்கனவே சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற டைட்டிலில் உருவாவதாக இருந்து பிறகு கைவிடப்பட்ட படமாகும்.

- Advertisement -

இப்போது நடிகர் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் திரிஷா சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நெடுஞ்சாலை நாயகி ஷிவதா லப்பர் பந்து நடிகை சுவாசிகா நட்டி மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் ஆர்ஜே பாலாஜியே நடிக்கிறார்.

இந்த படத்துக்கு முன்பாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படம் திரைக்கு வர உள்ளது. மே 1ம் தேதி வெளியாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வாய் பேசாத கேரக்டரில் நடித்துள்ளார். கங்குவா தோல்விக்கு பிறகு வரும் இந்த படம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ்தாணு பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். இந்த படத்துக்கான ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளில் வெற்றிமாறன் ஈடுபட்டு வருகிறார். மிக விரைவில் படப்பிடிப்பை மதுரையில் துவங்க உள்ளனர். இதில் அமீர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இந்நிலையில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படம் அடுத்த ஆண்டில் பொங்கலுக்குதான் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதே போல் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படமும் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் என்ற திட்டத்துடன்தான் படப்பிடிப்பே துவங்க உள்ளது. இவர்கள் நடித்துவரும் மற்ற படங்கள் இந்த ஆண்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்