தமிழ் சினிமாவை பொருத்த வரை ரசிகர்களிடம் ஹீரோக்களுக்கு இமேஜ் இருக்கும் வரைதான் தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கும். தொடர்ந்து தோல்வி படங்களை தரும் ஹீரோக்கள் மிக விரைவில் காணாமல் போய் விடுவர். ஏனென்றல் நான்கைந்து தோல்வி படங்களை தொடர்ந்து தரும் ஹீரோக்கள் மீண்டும் பழைய இமேஜை எட்டிப் பிடிப்பது சவாலான விஷயம்.
அந்த வகையில் பல தோல்வி படங்களால் இமேஜ் இழந்த நடிகர் கமல்ஹாசனுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் கம்பேக் ஆக அமைந்தது. அதே போல் சிம்புவுக்கு மாநாடு படம் இருந்தது. நடிகர் விஷாலுக்கு மார்க் ஆண்டனி படம் கம்பேக் தந்தது. நடிகர் விஜய் சேதுபதிக்கு மகாராஜா படம் கம்பேக் கொடுத்தது.
அந்த வகையில் நடிகர் ரவி மோகனுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே தோல்வி படங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதில் அகிலன் இறைவன் சைரன் 108 பிரதர் காதலிக்க நேரமில்லை என கடந்த 3 ஆண்டுகளில் வெளியான அனைத்து படங்களுமே அவருக்கு பெரிய வெற்றியை பெற்றுத் தரவில்லை.
அதே நேரத்தில் ஹீரோக்களின் படங்களின் தோல்வியை நிர்ணயிப்பது அவர்களது சொந்த வாழ்க்கையும்தான் என்பது கவனிக்கத்தக்கது. சினிமாவில் ஜெயித்த கமல், அரசியலில் ஜெயிக்காமல் போனதற்கு அவர் மீதான தனிப்பட்ட விமர்சனங்களும் முக்கிய காரணம். சின்னதம்பி படத்துக்கு நடிகர் பிரபு பெரிய வரவேற்பை பெறவில்லை. குஷ்பு பிரபு திருமணம் குறித்த வதந்தி அவரது இமேஜை டேமேஜ் ஆக்கியது.
சொந்த வாழ்க்கையில் நடிகர்களுக்கு இமேஜ் என்பது மிகவும் முக்கியம். அதுவும் ஹீரோக்களின் மீதான அபிமானம் ரசிகர்களுக்கு குறைந்து விட்டால் பிறகு அவர்களது படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வமோ விருப்பமோ காட்ட மாட்டார்கள். அதனால்தான் ரஜினி விஜய் அஜீத்குமார் போன்ற பெரிய நடிகர்களே பர்சனலாக தங்களது இமேஜை தற்காத்து கொள்வதில் அதிக கவனமாக உஷாராக இருக்கின்றனர்.
ஏற்கனவே பல தோல்வி படங்களை தந்து இமேஜை இழந்துள்ள நடிகர் ரவி மோகன் இப்போது மனைவியுடன் பிரிவு, பாடகி கெனிஷாவுடன் நட்பு என கடுமையான விமர்சனத்தில் இருந்து வருகிறார். இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகர் ரவி மோகன் அடுத்து வரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்குமா, அவரது சொந்த வாழ்க்கை விமர்சனங்கள் அவரது படங்களின் வெற்றியை பாதிக்குமா என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்கு எழுப்பியுள்ளது.





