நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் வளர்ந்துவிட்ட பெரிய நடிகராக இருந்தாலும் அவர் விஜய், அஜீத்குமாருக்கு அடுத்த நிலையில்தான் இருந்து வருகிறார். சில நேரங்களில் சூர்யா படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றாலும், அடுத்தடுத்த படங்கள் சரியாக போகாத போது, அவரது மார்க்கெட் வெகுவாக சரிந்து விடுகிறது.
பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்தும், கடுமையாக உழைத்தும் பெரிய அளவில் பெயர் கிடைக்காததால், பாலிவுட்டில் உங்களை பெரிய ஆளாக்கி காட்டுகிறேன் என அவரது மனைவி ஜோதிகா சபதம் செய்திருக்கிறார். இதையடுத்து சூர்யா, ஜோதிகா மற்றும் தங்களது பிள்ளைகளுடன் சென்று மும்பையில் செட்டிலாகி விட்டனர்.
குழந்தைகளின் கல்வி எதிர்காலம் கருதி, மும்பையில் குடியேறியதாக ஜோதிகா கூறினாலும், உண்மை அதுவல்ல. சூர்யாவுக்கு இந்தியில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும். மேலும், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளிலும் ஜோதிகா நடிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை செய்துக்கொண்டு இருப்பவர், மாஜி நாயகி, நக்மா தான். ஜோதிகாவின் சகோதரி.
இப்போது இந்தி படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் நடிகர் சூர்யா. தொடர்ந்து ஹாலிவுட் படம் ஒன்றில் சூர்யா நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதிலும் கமிட் ஆகிவிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் பாலிவுட், ஹாலிவுட் என இரண்டிலும் காலடி பதிக்கிறார் தமிழ் நடிகர் சூர்யா என்பது, கோலிவுட் சினிமாவுக்கு பெருமைதான்.
இதற்கிடையே சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா நடித்த கேரக்டரில் இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக சூர்யாவுக்கு இருந்தது என்பதால், இந்தி ரீமேக்கில் கேமியோ ரோல் செய்கிறார் சூர்யா. அந்த படத்தில் 3 காட்சிகளில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிகர் சூர்யா, அக்ஷய்குமாருக்கு இந்தியில் டப்பிங் பேச போகிறார். சூரரைப் போற்று படத்தில், தமிழில் வசனம் பேசிய அவரே, இந்தியிலும் பேசியிலும் உணர்ச்சிபூர்வமாக இருக்கும் என்பதற்காக இந்த ஏற்பாடு. அதே வேளையில் சூர்யாவுக்கு சரளமாக இந்தி பேச வரும். இதற்கு காரணம் அவரது மனைவி ஜோதிகா தான். இந்தியில் எப்படியும் காலடி பதித்து, முன்னிலைக்கு வரவேண்டும் என லட்சியம் கொண்டுள்ள சூர்யா, இப்போது ஏகப்பட்ட குஷியில் இருந்து வருகிறார்.





