- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் கடைசி நாள் ஷூட்டிங்… இயக்குனர் எச் வினோத் செய்த ஏற்பாடு - பதறிப்போன...

ஜனநாயகன் படம் கடைசி நாள் ஷூட்டிங்… இயக்குனர் எச் வினோத் செய்த ஏற்பாடு – பதறிப்போன நடிகர் விஜய் – இப்படி ஒரு சம்பவமும் நடந்ததா?

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது நடித்து முடித்துள்ள படம் ஜனநாயகன். இந்த படம்தான் விஜய் நடிப்பில் வெளிவருகிற கடைசி படம். இத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு நடிகர் விஜய், அரசியலில் முழு கவனம் செலுத்த உள்ளார். இது விஜயின் 69வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்திருக்கிறார்.

பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் இந்த படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கேரக்டரில் நடிகை மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். வரும் 2026ம் ஆண்டில் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸாக உள்ளது.

- Advertisement -

ஜனநாயகன் படத்தில் கௌதம் மேனன் பிரகாஷ் ராஜ் பிரியாமணி பாபி தியோல் நரேன் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் படத்தின் இயக்குனர் தரப்பில் இதுவரை அப்படி ஒரு தகவல் இல்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. அந்த நாளில் கேக் வெட்டி இறுதி நாளை நிறைவு செய்திருக்கின்றனர். அப்போது படக்குழு சார்ந்த அனைவரும் நடிகர் விஜயுடன் நின்று புகைப்படம் வீடியோ எடுத்துக்கொண்ட நிலையில், அதை யாரும் பொதுவெளியில் வெளியிட கூடாது என்று நடிகர் விஜய் உத்தரவாகவே கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆனால் ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்த இறுதி நாளில் படக்குழு சார்ந்தவர்கள் மட்டுமின்றி விஜயின் ரசிகர்களையும் வரவழைத்து சினிமாவை விட்டு ஜனநாயகன் படத்துடன் வெளியேறி செல்லும் நடிகர் விஜய்க்கு பிரிவு உபசார விழா போல நடத்த இயக்குனர் எச் வினோத்தும், படத்தின் தயாரிப்பு நிறுவனமும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளது. காலத்தால் அழியாத ஒரு சம்பவத்தின் பதிவாகவும் அதை இயக்குனர் எச் வினோத் திட்டமிட்டிருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் விஜயிடம் அவரது சம்மதத்தை எச் வினோத் கேட்டிருக்கிறார். பதறிப்போன நடிகர் விஜய், தயவு செய்து அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க. அது ரொம்பவும் எமோஷனலான ஒரு விஷயம். என்னாலேயே அதை கண்ட்ரோல் பண்ண முடியாது. நல்ல வேளையாக முதலிலேயே என்னிடம் கேட்டீர்களே, தயவு செய்து வேண்டவே வேண்டாம். என்னால் அது முடியாது என்று மறுத்திருக்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்