- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 69 படத்தை டைரக்ட் செய்ய போவது இவர்தான், கதையை கேட்டு விஜய் எடுத்த அதிரடி...

விஜய் 69 படத்தை டைரக்ட் செய்ய போவது இவர்தான், கதையை கேட்டு விஜய் எடுத்த அதிரடி முடிவு – கப்பு முக்கியம் பிகிலு சொன்னது இதற்கு தானா?

- Advertisement -

விஜய் நடித்த லியோ படம், விமர்சன ரீதியாக பலவிதமாக பேசப்பட்டாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனைகளை செய்திருக்கிறது. லியோ படத்தின் பாதி வரை விறுவிறுப்பும், திரைக்கதையும் ரசிகர்களை திருப்திபடுத்திய நிலையில், பின்பகுதி தான் மிகப்பெரிய சொதப்பலாக, குழப்பமாக அமைந்தது.

இப்போது விஜய் 68 படத்தில், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என, முக்கிய நட்சத்திர நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அப்பா, மகன் என்ற இரண்டு கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார். அதில் சிநேகாவுக்கு அப்பாவுக்கு ஜோடியாக நடிப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இந்த படத்துக்கு பிறகு விஜய் 69 படத்தில் நடிக்கும் விஜய், அதற்கு பிறகு நடிப்பில் சிறிய இடைவெளி விடுகிறார். அதாவது 2026ம் ஆண்டில் வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இந்த இடைவெளி என்று தெரிகிறது. சட்டசபை தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் விஜய், அதன்பிறகு சினிமாவில் தொடர்வதா, அரசியலில் தொடர்வதா என்பதை முடிவு செய்ய வாய்ப்புள்ளது.

அதனால் விஜய் நடிக்கும் விஜய் 69 படம், அவரது அரசியல் நுழைவுக்கு முன்னோட்டமாக மிகப்பெரிய அரசியல் படமாக இருக்க வேண்டும் என விஜய் விரும்புகிறார். குறிப்பாக ஷங்கர் இயக்கிய முதல்வன் படம் போல, ரசிகர்கள் மத்தியில் பெரிய அலையை அந்த படம் ஏற்படுத்த வேண்டும் என ஆசைப்படுகிறார்.

- Advertisement -

அதனால் அதுபோன்ற ஒரு அரசியல் படத்தை உருவாக்குமாறும். திரைக்கதையை திட்டமிடுமாறும் ஷங்கரிடம் விஜய் கூறியதாக முதலில் தகவல் இருந்தது. அதனால் விஜய் 69 படத்தை இயக்குர் ஷங்கர்தான் இயக்குவார் என்றும் பேசப்பட்டது. ஆனால் இப்போதைய ஷங்கர் படங்களான இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களும் அரசியல் பேசும் படங்கள் என, அதில் நடித்த ஹீரோ கமல்ஹாசனே சொல்லி விட்டதால், விஜய் யோசித்து வருகிறார்.

ஒரே இயக்குநர் அரசியல் பற்றி தொடர்ந்து அவரது படங்களில் சொன்னால், ரசிகர்களுக்கு போர் அடிக்க வாய்ப்புள்ளது. இந்தியன் படங்களை போன்றே விஜய் படமும் பார்க்கப்படலாம் என்பதால், விஜய் 69 படத்தை, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க விஜய் சம்மதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜிடம் 2 முறை கதைகேட்டு அதை மறுத்த விஜய், இந்த முறை அவர் சொன்ன கதையை கேட்டு மிகவும் பிடித்து விட்டதாக கூறி இருக்கிறார். கதையும் அரசியல் களமாக, வெகு ஸ்ட்ராங்காக இருப்பதால், ஷங்கருக்கு பதிலாக கார்த்திக் சுப்புராஜூக்கு வாய்ப்பு அதிகம் எனத் தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்