- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்போது கமல் பேசியது எனக்கு சரியா புரியலே… முதலில் ஆதரவு தந்து விட்டு இப்போது பின்வாங்கிய...

அப்போது கமல் பேசியது எனக்கு சரியா புரியலே… முதலில் ஆதரவு தந்து விட்டு இப்போது பின்வாங்கிய பிரபல கன்னட நடிகர்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வருகிற 5ம் தேதி தக்லைஃப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்த இந்த விழாவில் கமல் சிம்பு திரிஷா அபிராமி மணிரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் பங்கேற்றார்.

அந்த விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று ஒரு கருத்தை தெரிவித்தார். இது கர்நாடகாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னட அமைப்புகள் கமலுக்கு எதிராக கண்டனமும் எதிர்ப்பு தெரிவித்தன. அங்கு வைக்கப்பட்ட தக்லைஃப் பட பேனர்கள் சேதப்படுத்தப்பட்டன. போஸ்டர்களும் கிழிக்கப்பட்டன.

- Advertisement -

இதுகுறித்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடகாவில் கோரிக்கை வலுத்த நிலையில், மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று கமல் உறுதியாக கூறிவிட்டார். இதையடுத்து கமல் நடித்த தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்படுவதாக கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டது.

கர்நாடகாவில் தக்லைஃப் ரிலீஸ் தடை செய்யப்பட்டதால் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் கமலுக்கு ரூ. 20 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை பொருட்படுத்தாத கமல் மன்னிப்பு கேட்காமல் துணிச்சலாக நின்றது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்த விவகாரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமலுக்கு ஆதரவாக பேசியிருந்தார். கன்னட மொழி குறித்து பேசும் நீங்கள் அந்த மொழிக்காக என்ன செய்தீர்கள், கமல் குறித்து தவறாக பேசாதீர்கள் என்றும் கூறியிருந்தார். இதற்கு கன்னட அமைப்புகள் தரப்பில் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இதையடுத்து சிவராஜ்குமார் தனது கருத்தை மாற்றிக்கொண்டு பேசியிருப்பது வைரலாகி வருகிறது.கன்னட மொழி குறித்து கமல் பேசியதை நான் சரி என்று சொல்லவில்லை. கன்னடம் தமிழ் குறித்து பேசும் போது இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நான் கைதட்டியது உண்மைதான்.

அந்த சந்தர்ப்பத்தில் கன்னட மொழி குறித்து அவர் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை. கன்னட மொழி மீது எனக்கு மிகுந்த கௌரவம் மரியாதை உள்ளது. எனது தந்தை கன்னட மொழி மீது வைத்திருந்த பற்று குறித்து உங்களுக்கு நன்கு தெரியும். நான் கமல்ஹாசன் பேசியபோது மேடையில் அமர்ந்திருந்த எனக்கு அவர் பேசியது சரியாக கேட்கவில்லை. அவர் என்ன பேசினார் என்பதை 2வது முறையாக கேட்ட போதுதான் எனக்கே புரிந்தது. அவரது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று நடிகர் சிவராஜ்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்