- Advertisement -
Homeபொழுதுபோக்குபடம் வெளியாகும் முன்பே பிசினஸில் உச்சத்தை தொட்ட லியோ, தயாரிப்பாளர் லலித் செய்த புரட்சி, ஒவ்வொரு...

படம் வெளியாகும் முன்பே பிசினஸில் உச்சத்தை தொட்ட லியோ, தயாரிப்பாளர் லலித் செய்த புரட்சி, ஒவ்வொரு ஏரியாலயும் விஜய்தான் கில்லி போல? சும்மா அதிரி புதிரியா இருக்கே

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார், இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வேற லெவல் பிசினஸ் பார்த்துள்ளார். இது குறித்து பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி தனது வீடியோ ஒன்றில் விலாவாரியாக கூறியுள்ளார்.

லியோ படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் இத்திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமத்தை விநியோகஸ்தர்களிடம் கொடுக்காமல் சொந்தமாக வெளியிட முடிவு செய்துள்ளாராம். ஆனால் இந்த நிமிடம் லலித்குமார் “லியோ” திரைப்படத்தை விற்க முயன்றால் 90 கோடிகளில் இருந்து 100 கோடிகள் வரை கொடுத்து இத்திரைப்படத்தை விலைக்கு வாங்க பலரும் தயாராக இருக்கிறார்களாம்.

- Advertisement -

அதே போல் மிக அதிக விஜய் ரசிகர்கள் இருக்கும் மாநிலமான கேரளாவில் ஸ்ரீ கோகுலம் மூவீஸ் என்ற நிறுவனம், லியோ திரைப்படத்தின் கேரள மாநில திரையரங்கு உரிமத்தை ரூ.15 கோடிகளுக்கு வாங்கியுள்ளதாம். மேலும் ஆந்திரா/தெலுங்கானா மாநிலங்களில் சித்தாரா என்டெர்டெயின்மென்ட்ஸ் என்ற நிறுவனம் “லியோ” திரைப்படத்தின் திரையரங்கு உரிமத்தை ரூ.20 கோடிகளுக்கு வாங்கியுள்ளதாம்.

இதனை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரை தவிர்த்த மற்ற பகுதிகளில் ஸ்வாகத் என்டெர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு லலித்குமார், “லியோ” படத்தின் திரையரங்கு உரிமத்தை ரூ.7 கோடிகளுக்கு விற்றுள்ளாராம். ஆனால் பெங்களூர் பகுதியில் மட்டும் லலித்குமார் சொந்தமாக வெளியிடுகிறாராம். இதன் மூலம் லலித்குமாருக்கு ரூ.5 கோடிகள் பங்கு வர வாய்ப்புள்ளதாம்.

- Advertisement -

மேலும் இத்திரைப்படத்தின் வெளிநாட்டு திரையரங்கு உரிமையை, அதாவது ஜப்பான், ரஷ்யா, சீனா, தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் ஃபார்ஸ் ஃபிலிம் கம்பெனி என்ற நிறுவனத்திற்கு ரூ.55 கோடிகளுக்கு விற்றுள்ளாராம்.

வட இந்தியாவை பொறுத்தவரை “லியோ” படத்தினை அனில் என்கிற ஒரு விநியோகஸ்தர் மூலம் சொந்தமாக வெளியிட முடிவெடுத்திருக்கிறாராம் லலித்குமார். இதன் மூலம் லலித்குமாருக்கு ரூ.10 கோடிகள் பங்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.

அதே போல் “லியோ” ஹிந்தி பதிப்பின் சேட்டலைட் உரிமையை  ரூ.22 கோடிகளுக்கு விற்றுள்ளாராம். மேலும் “லியோ” படத்தின் அனைத்து மொழி பதிப்புகளின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.125 கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதாம். தென்னிந்தியாவின் சேட்டலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி நிறுவனம் ரூ.70 கோடிகளுக்கு வாங்கியுள்ளதாம்.

மேலும் “லியோ” படத்தின் ஆடியோ உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் ரூ.15 கோடிகளுக்கு வாங்கியுள்ளதாம். ஆக மொத்தம் “லியோ” திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரூ.434 கோடிகளுக்கு பிசினஸ் பார்த்துள்ளதாக பிஸ்மி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்