- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படம் ரிலீஸானதே பல பேருக்கு தெரியலே … வசூலில் ஏமாற்றிய தனது படம் குறித்து...

அந்த படம் ரிலீஸானதே பல பேருக்கு தெரியலே … வசூலில் ஏமாற்றிய தனது படம் குறித்து வெளிப்படையாக வருத்தப்பட்ட நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. கடந்தாண்டில் அவரது நடிப்பில் வெளியான அவரது 50வது படம் மகாராஜா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. சீனாவில் இந்த படம் ரூ. 90 கோடி ரூபாய் வசூலித்தது.

அதன்பிறகு நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி என்ற படத்தில் பரோட்டா மாஸ்டராக நடித்தார். இந்த படத்தில் நாயகியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இந்த படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. அதே போல் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படமும் விரைவில் வெளியாக உள்ளது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ஏஸ் என்ற படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஆறுமுக குமார் டைரக்ட் செய்திருந்தார். போல்ட் கண்ணன் என்ற கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். நாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருந்தார். இதில் காமெடி ரோலில் நடிகர் யோகிபாபு நடித்திருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகாராஜா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த ஆண்டில் வெளியான 51வது படம்தான் ஏஸ். மேலும் விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டில் வெளியான முதல் படமும் இதுதான். அதனால் படம் பெரிய வெற்றியை பெறும், ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் சரியாக போகாமல் பலத்த ஏமாற்றத்தை தந்துவிட்டது.

- Advertisement -

இந்த படம் கடந்த மே 23ம் தேதி வெளியான நிலையில், உலகம் முழுவதும் இந்த படத்தின் மொத்த வசூலே 7 கோடி ரூபாய்தான் என்று தெரிய வந்துள்ளது. படம் வெளியான 10 நாட்களில் மொத்த வசூலே 7 கோடி ரூபாய்தான் என்பது பெரிய அதிர்ச்சியை ஏமாற்றத்தை படக்குழுவுக்கு தந்திருக்கிறது. அதுவும் விஜய் சேதுபதி நடித்த படத்துக்கு இப்படி ஒரு மோசமான வசூலா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே ரஜினி கமல் விஜய் போன்றவர்களே தங்களது படங்களை பிரமோசன் செய்து வருகின்றனர். இசை வெளியீட்டு விழா டிரெய்லர் வெளியீட்டு விழா என ரசிகர்களை சந்தித்து படத்தை பிரமோ செய்கின்றனர். ஆனால் ஏஸ் படத்துக்கு பிரமோசன் நிகழ்ச்சியே நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ஏஸ் படம் ரிலீஸ் ஆனதே பல பேருக்கு தெரியவில்லை, என்று வெளிப்படையாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்