- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்பு தளத்தில் அப்செட் ஆன டைரக்டர் ஆர்ஜே பாலாஜி - அவரே ஷூட்டிங் கேன்சல் என...

படப்பிடிப்பு தளத்தில் அப்செட் ஆன டைரக்டர் ஆர்ஜே பாலாஜி – அவரே ஷூட்டிங் கேன்சல் என அறிவித்த அவலம் – என்ன கொடும சார் இது?

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் அவரது 45வது படத்தை நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு வேட்டை கருப்பு என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் படக்குழு தரப்பில் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. கருப்பண்ணசாமி அல்லது அய்யனார் சாமி கதையில் இந்த படம் உருவாவதால் இந்த டைட்டில் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் மெளனம் பேசியதே ஆறு படங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யா திரிஷா இணைந்து நடித்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் நட்டி நடராஜ் யோகிபாபு மன்சூர் அலிகான் ஆர்ஜே பாலாஜி ஆகியோரும் லப்பர் பந்து நடிகை சுவாசிகா நெடுஞ்சாலை பட நாயகி ஷிவதா நாயர் மற்றும் அபிராமி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.

வேட்டை கருப்பு படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற சூர்யா பிறந்த நாளில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டிலை அறிவிக்க உள்ளனர். அதே நேரத்தில் வேட்டை கருப்பு என்ற டைட்டில் சீக்ரட் வெளியாகி விட்டதால் இந்த படத்துக்கு வேறு டைட்டிலை வைக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிடவும் அதிக வாய்ப்புள்ளது.

ஆனால் வேட்டை கருப்பு டைட்டில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டதால் இந்த டைட்டிலை ஆர்ஜே பாலாஜி நிராகரித்தாலும் மற்ற யாரேனும் ஒருவர் நிச்சயமாக இந்த டைட்டிலை பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு அது பிரபலமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அய்யனார் கதையில் சூர்யா நடித்திருப்பதால் இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

வேட்டை கருப்பு படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் சென்னை பூந்தமல்லி பகுதியில் செட் அமைத்து கடந்த 10 நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது திடீரென சில தினங்களாக படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்ட நிலையில் நடிகர் சூர்யா பழனி உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.

இதுகுறித்து வெளியான தகவலின்படி வேட்டைகருப்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. தொடர்ந்து சில தினங்களாக ஏசி செயல்படாத நிலையில் புழுக்கத்தில் அதிக வாட்ஸ் கொண்ட விளக்குகளின் ஒளி வெளிச்சத்தில் நடிக்கவே முடியாமல் நடிகர் நடிகைகள் அவதிப்பட்டுள்ளனர். பலமுறை சொல்லியும் ஏசி பழுது சரிசெய்யப்படாத நிலையில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜியே ஒரு கட்டத்தில் வெறுப்பாகி, ஷூட்டிங் கேன்சல் என அறிவித்துள்ளார். ஏசி பழுதுகளை சரிசெய்த பின்பே ஷூட்டிங் நடக்கும் என்றும் அவரே கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்