- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் தனது பாணியில் பிரச்னை செய்த டைரக்டர் மிஷ்கின், அச்சத்தில் பதறிப்போன படக்குழுவினர் -...

ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது பாணியில் பிரச்னை செய்த டைரக்டர் மிஷ்கின், அச்சத்தில் பதறிப்போன படக்குழுவினர் – இப்படி வம்பு பண்றீங்களே ப்ரோ?

- Advertisement -

டைரக்டர் மற்றும் நடிகர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு கலைஞனாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். திரைப்பட இயக்கத்திலும், நடிப்பிலும் தனக்கென ஒரு தனி பாணியை பின்பற்றி, அதிலும் மிகப்பெரிய வெற்றியைையும் மிஷ்கின் பெற்றிருக்கிறார். குறிப்பாக லியோ படத்தில், மிஷ்கின் படம் முழுக்க வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதுதான் பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

மிஷ்கின் இயக்கிய படங்களில் துப்பறிவாளன், சைக்கோ, அஞ்சாதே போன்ற படங்கள் வேற லெவலில் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அதுபோல் சவரக்கத்தி படத்தில், அவரது காமெடி கலந்த ஆவேச நடிப்பு ஒருபுறம் சிரிப்பாகவும், மறுபுறம் மிரட்டலாகவும் இருந்து ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தது.

- Advertisement -

இப்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் டிரெயின் என்ற படத்தை, டைரக்டர் மிஷ்கின் இயக்கி வருகிறார். மேட்டுப்பாளையம் டூ சென்னை வரும் ரயிலில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த படம். மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை வருகிற ரயிலில் நடக்கிற சம்பவங்களை சுவாரசியமாக வைத்து இந்த கதையை மிஷ்கின் உருவாக்கி இருக்கிறார். இதில் டைரக்டர் வெற்றிமாறன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஒரு நாள் மட்டும் மேட்டுப்பாளையத்தில் ரயில் தண்டவாள பகுதிகளில் நடந்துள்ளது. அப்போது படப்பிடிப்பை காண அந்த பகுதியில் இருந்த மக்கள் அங்கு திரண்டு விட்டனர். மேலும் டைரக்டர் மிஷ்கினை பார்க்கும் ஆர்வத்திலும் அங்கு வந்திருக்கின்றனர்.

- Advertisement -

இப்படி வெட்டவெளியில் நடந்த படப்பிடிப்பை காண மக்கள் கூட்டம் திரண்டதால், ஒரு கட்டத்தில் கூட்டத்தை பார்த்து டென்சன் ஆன டைரக்டர் மிஷ்கின், மைக்கில் கூட்டத்தில் இருந்தவர்களை அவரது பாணியில் பேசியுள்ளார். அதாவது கண்டபடி ஒருமையில் திட்டியுள்ளார். வழக்கமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ளவர்களை அவர் அப்படி திட்டுவதுதான் பழக்கம்.

இதையடுத்து அங்கு திரண்டிருந்த மக்களையும் மிஷ்கின் திட்டுவதை பார்த்து அரண்டு போன அவரது தம்பி ஆதித்யா, அண்ணா இப்படி நீங்க கண்டபடி ஏடாகூடமாக பேசினால், ஏதாவது பிரச்னை ஆகிடும். ஷூட்டிங்கே நடத்த முடியாமல் போயிடும் என அவரை கண்ட்ரோல் செய்து, சமாதானப்படுத்தி உள்ளார். மிஷ்கின் செய்த இந்த அடாவடியால், எங்கே ஏழரை நடந்து விடுமோ என்ற அச்சத்தில் படக்குழுவினர் கிடுகிடுத்து போயுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்