விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெற்று வரும் வேளையில் இந்த ஆண்டிற்கான ஏழாவது சீசன் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியானது இம்முறை ஏழாவது சீசனாக நடைபெற உள்ளது.

கடந்த சீசனில் அசீம் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்றிருந்தார். அதேவேளையில் அவரை காட்டிலும் விக்ரம் தான் மக்களின் மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்று இருந்தார். அதோடு அந்த டைட்டில் பட்டமும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஏழாவது சீசனுக்கான புரோமோ சூட் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதால் விரைவில் இந்த நிகழ்ச்சியானது துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போன்று இந்த சீசனுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? யார்? என்பது குறித்த ஒரு சில தகவல்களும் அரசல் புரசலாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லின், மாகாபா, பப்லு பிரித்விராஜ், ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், கோவை பெண் ஓட்டுனர் ஷர்மிளா, நடன ஸ்ரீதர் போன்றவர்களின் பெயரும் அடிபட்டு வருகிறது.

அதோடு அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷன்களில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுவரை எந்த சீசனிலும் எந்த மொழியிலும் நடைபெறாத ஒரு மாற்றம் இந்த பிக்பாஸ் சீசன் 7- தமிழில் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகிவுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு பிக்பாஸ் போட்டியாளர்களை ஒரு வீட்டில் இல்லாமல் இரண்டு வீட்டில் களமிறக்க ஒரு யோசனை இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு ஒரே வீட்டில் அனைத்து பிரபலங்களையும் அடைப்பதை விட இரண்டு வீடுகளில் போட்டியாளர்களை இரண்டு குழுக்களாக பிரித்து சில நாட்கள் டாஸ்க் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்பின்னர் மீண்டும் இரண்டு வீட்டில் உள்ள போட்டியாளர்களும் ஒரே வீட்டில் ஒன்றாக இணைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்று எந்த ஒரு மொழியிலும் நடைபெறாத வேளையில் தமிழ் மொழியில் இந்த முயற்சியை அவர்கள் புதிதாக எடுக்க இருக்கிறார்கள். இருப்பினும் இந்த முயற்சி எந்த அளவிற்கு அவர்களுக்கு பாசிட்டிவான ரிசல்ட்டை தரும் என்பது பொறுத்திருந்தால் தான் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.





